- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனிமேல் உழைப்பு வீணாகாது.. உள்ளூர் தொடர்களுக்கு புதிய பரிசுகளை அறிவித்த ஜெய் ஷா.. விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா சிறந்து விளங்குவதற்கு ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்கள் முக்கிய காரணமாக திகழ்கின்றன. இருப்பினும் ஐபிஎல் வந்தது முதல் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட இந்திய வீரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் ஐபிஎல் தொடரில் வெறும் 2 மாதம் விளையாடுவதற்கு லட்சம் முதல் கோடிகள் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

அதே போல ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த கேட்ச் அல்லது பெரிய சிக்சர் அடித்தால் அதற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் பரிசாக கொடுக்கப்படுகின்றன. ஆனால் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் பெரிதாக எந்த பரிசும் கொடுக்கப்படுவதில்லை. மேலும் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களுக்கே இந்திய அணியில் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

- Advertisement -

புதிய அறிவிப்பு:

அதனால் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கே அனைத்து வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் அதை மாற்றுவதற்காக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான சீனியர் ஜூனியர் தொடர்களுக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளும் பரிசுத்தொகையும் கொடுக்கப்படும் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வரை ரஞ்சிக் கோப்பை போன்ற தொடர்களில் ஃபைனல் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகனுக்கு மட்டுமே பரிசுகள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் லீக் முதல் ஃபைனல் வரை அனைத்து போட்டிகளிலும் விருதுகள் மற்றும் அதற்கு தகுந்த பணத்தை பரிசாக வழங்கப்படும் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார். இது இந்தியாவில் நடக்கும் அனைத்து ஆடவர் மற்றும் மகளிர் தொடர்களுக்கு பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

உழைப்பு வீணாகாது:

அத்துடன் ஆடவர் சீனியர் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஸ்தாக் அலி கோப்பை தொடர்களுக்கும் இந்த பரிசுத்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்படும் என்றும் ஜெய் ஷா ட்விட்டரில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்தியாவில் விளையாடும் ஆயிரக்கணக்கான உள்ளூர் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஜெய் ஷா ஐ.சி.சி சேர்மேன் ஆகிட்டா அடுத்து பி.சி.சி.ஐ புதிய செயலாளர் யார் தெரியுமா? – விவரம் இதோ

இதனால் சாதாரண லீக் போட்டிகளில் அவர்கள் வெளிப்படுத்தும் அவர்களுடைய உழைப்பு வீணாகாமல் அதற்கு தகுந்த பரிசு கிடைக்க உள்ளது. இது போக கடந்த வருடம் ரஞ்சிக் கோப்பை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை 2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தி ஜெய் ஷா அறிவித்திருந்தார். மேலும் தோல்வியை சந்திக்கும் அணிக்கும் செமி ஃபைனலில் தோற்கும் அணிக்கும் முறையே 3, 1 கோடி பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. மொத்தத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிசிசிஐ பரிசுத் தொகையை உயர்த்தியுள்ளது அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.

- Advertisement -