- Advertisement -

45 பிட்ச், ஒலிம்பிக் குளம்.. உலகத் தரத்தில் இந்தியா.. புதிய தேசிய அகாடமியின் வசதிகளை வெளியிட்ட ஜெய் ஷா

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு நிகராக இந்திய அணியும் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அத்துடன் 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் டாப் 3 இடங்களுக்குள் இருக்கும் இந்தியா உலகின் சிறந்த அணியாக விளையாடி வருகிறது.

அப்படி சர்வதேச அரங்கில் இந்தியா சிறந்து விளங்குவதற்கு பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமி முக்கிய காரணமாக இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் அங்கே தான் அண்டர்-19 அளவில் சாதிக்கும் பல இளம் வீரர்கள் மேற்கொண்டு சீனியர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவார்கள். அத்துடன் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் காயத்தை சந்தித்தால் உடனடியாக என்சிஏவுக்கு சென்று விடுவார்கள்.

- Advertisement -

புதிய என்சிஏ:
அங்கு இயக்குனராக இருக்கும் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையிலான பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரின் வழிகாட்டுதலை பின்பற்றி வீரர்கள் காயத்திலிருந்து குணமடைவது வழக்கமாகும். சொல்லப்போனால் குணமடைந்து விட்டார் என்று என்சிஏ சான்றிதழ் வழங்கினால் மட்டுமே அந்த வீரர்கள் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட முடியும். அந்த வகையில் 2022இல் காயத்தை சந்தித்த ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் என்சிஏவில் குணமடைந்து தற்போது மீண்டும் இந்தியாவுக்காக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரில் புதிதாக உருவாக்கி வரும் தேசிய அகடமியின் வசதிகளை பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் வெளியிட்டுள்ளார். அதில் சர்வதேச தரத்துக்கு நிகரான 3 மைதானங்கள் மற்றும் 45 பயிற்சி பிட்ச்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார். மேலும் ஒலிம்பிக் தரத்திற்கு நிகராக நீச்சல் குளம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் புகைப்படத்துடன் ஜெய் ஷா பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமியின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளது என்பதை ஆர்வத்துடன் அறிவிக்கிறேன். புதிய என்சிஏவில் 3 உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள், 45 பிட்ச்கள், உள்ளரங்க பிட்ச்கள், ஒலிம்பிக் வடிவ நீச்சல் குளம்”

இதையும் படிங்க: 9 மாசம் முடிஞ்சும் ரோஹித் சர்மா மாறவே இல்ல.. தொடர்ந்து இதை செய்வாரு.. பவுலிங் கோச் பாராட்டு

“பயிற்சி எடுப்பதற்கான வசதிகள், காயத்திலிருந்து குணமடைவதற்கான ஸ்போர்ட் சயின்ஸ் வசதிகள் உள்ளன. அது நம்முடைய நாட்டின் தற்போதைய மற்றும் வருங்கால கிரிக்கெட்டர்கள் தங்களுடைய திறனை சிறந்த சூழ்நிலையில் முன்னேற்றுவதற்கான உதவியை வழங்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் புதிய என்சிஏ திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -