அன்னபோஸ்டாக ஐசிசி தலைவரான ஜெய் ஷா.. புதிய உலக சாதனை.. எப்போது வரை இருப்பார்?

Jay Shah 2
- Advertisement -

உலக கிரிக்கெட்டையை கட்டுப்படுத்தும் சர்வதேச வாரியமான ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த இந்திய அரசின் அமைச்சரின் மகனான அவர் கடந்த 2009 – 2013 காலகட்டங்களில் அம்மாநில வாரியத்தின் உறுப்பினராக இருந்தார். அதன் பின் 2013 – 2015 வரை குஜராத் மாநில வாரியத்தின் துணைச் செயலாளராக அவர் பணிபுரிந்தார்.

அதைத் தொடர்ந்து 2015 – 2019 காலகட்டங்களில் பிசிசிஐ பைனான்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் கமிட்டியில் ஜெய் ஷா இடம் வகித்தார். இறுதியில் 2019ஆம் ஆண்டு பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்ற அவர் 2022இல் மீண்டும் மறு நியமனம் செய்யப்பட்டார். அப்போது முதல் இந்திய கிரிக்கெட்டில் அவர் சில முன்னேற்ற நடவடிக்கைகளையும் எடுத்தார்.

- Advertisement -

ஐசிசி தலைவர் ஜெய் ஷா:

குறிப்பாக இந்திய அணியை பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தது, முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை துவங்கியது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ஊக்கத்தொகையை அறிவித்தது போன்றவற்றை சொல்லலாம். அதனால் ரசிகர்களிடமும் புகழ்பெற்ற அவர் தற்போது ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரேக் பார்க்கலே 2020இல் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 3வது முறையாக அவர் ஐசிசி தலைவர் பதவிகளில் நீடிக்க விரும்பாமல் தாமாக விலகினார். அதைத் தொடர்ந்து ஜெய் ஷா போட்டியின்றி அன்னபோஸ்ட் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக பணக்கார வாரியமாக திகழும் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அனைத்து வெளிநாட்டு வாரியங்களின் ஆதரவை முழுமையாக பெற்றுள்ளார்.

- Advertisement -

வித்யாச உலக சாதனை:

அதனால் அடுத்த ஐசிசி தலைவர் பதவிக்கு வேறு நாட்டு வாரியங்கள் சார்பில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் அனைத்து உறுப்பு வாரியங்களின் ஆதரவுடன் ஜெய் ஷா ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சொல்லப்போனால் 35 வயதில் இந்த பொறுப்பேற்றுள்ள ஜெய் ஷா உலகிலேயே மிகவும் இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவராக வித்தியாசமான உலக சாதனையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: தன்னம்பிக்கை வேற லெவல்.. அதுல மைக்கேல் பெவனை விட விராட் கோலி தான் சிறந்தவர்.. ஆண்டர்சன் பாராட்டு

அத்துடன் ஜகன்மோகன் டால்மியா, சரத் பவார், தமிழகத்தின் என் ஸ்ரீனிவாசன், சசாங் சிங் ஆகியோருக்கு பின் ஐசிசி தலைவரான 5வது இந்தியர் என்ற பெருமையையும் ஜெய் ஷா பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 1 முதல் 2024 ஐசிசி தலைவராக பொறுப்பேற்க உள்ள ஜெய் ஷா 2026 வரை நீடிக்க முடியும். அதன் பின் செயல்பாடுகள் மற்றும் இதர நாட்டு வாரியங்களின் ஆதரவை பொறுத்து மீண்டும் அவர் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement