IPL 2022 : இந்த சீசனுக்கான ஐ.பி.எல் எப்போது துவங்கும்? எத்தனை நாட்கள் நடைபெறும் – ஜெய் ஷா அறிவிப்பு

Jay
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை சென்னை அணியானது 4-வது முறையாக கைப்பற்றி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது 15-வது ஐபிஎல் தொடரானது எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்றும் அதற்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த சீசனுக்கான ஐபிஎல் தொடர் எப்போது நடைபெறும்? எங்கு நடைபெறும்? என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

IPL

- Advertisement -

ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரானது எங்கு எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அவரது இந்த அறிக்கை பெரும் மகிழ்ச்சியான விடயமாக மாறியுள்ளது. அதன்படி இந்த 15-வது ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறும் என்று உறுதி செய்துள்ளார்.

அதேபோன்று ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த அனைத்து அணிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜெய்ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் இவ்வேளையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் போட்டிகள் திட்டமிட்டபடி இங்கு நடைபெறுவதில் சிக்கலும் ஏற்படலாம்.

இதையும் படிங்க : நான் இன்னைக்கு இந்திய அணிக்காக விளையாடுறேன்னா அதுக்கு இவங்க தான் காரணம் – வெங்கடேஷ் ஐயர்

ஒருவேளை இந்தியாவில் ஐ.பி.எல் நடைபெறும் வேளையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேளையில் போட்டிகளானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற பிளான் பி திட்டம் குறித்தும் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement