எஞ்சிய ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்தாதன் காரணம் என்ன ? – ஜெய்ஷா கொடுத்த விளக்கம்

Jay-sha
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களிடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள 31 போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் என்று பிசிசிஐ நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ipl

- Advertisement -

அதன்படி இந்த தொடரானது செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து அக்டோபர் 10 வரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. இந்த செய்தியினால் தற்போது இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில் பழைய போட்டிகளை வைத்து யார் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கணிக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என்று முடிவு எடுத்த பின் இந்தியாவில் ஏன் இந்த ஐபிஎல் தொடர் நடத்தப்படவில்லை என பிசிசிஐயின் பொருளாளர் ஆன ஜெய்ஷா விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : செப்டம்பர் அக்டோபர் மாதம் இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் ஐபிஎல் ஆட்டங்களை இந்தியாவில் நடத்துவது உகந்ததாக இருக்காது.

Rohith

மழை காரணமாக நிறைய போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் அதன் காரணமாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று ஜெய்ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகரித்த கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement