சூதாட்டத்தில் ஈடுபட்டால் தூக்கில் போடுங்க. அது யாராக இருந்தாலும் பாவம் பார்க்க கூடாது – பாக் கேப்டன் ஆவேசம்

Javed
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் அந்த அணியின் ஜாம்பவான் வீரருமான 62 வயது ஜாவித் மியான்தத் தனது யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கிரிக்கெட் குறித்த பல விஷயங்களை பற்றி பேசினார். மேலும் பல தகவல்களை ரசிகர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

Javed 1

- Advertisement -

குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களைப் பற்றியும் பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது : கிரிக்கெட் போட்டியை வைத்து நாட்டிற்கும் தங்களது அணிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டு அவப்பெயரை ஏற்படுத்தும் வீரர்கள் மீது எனக்கு எந்தவித மரியாதையும், அனுதாபமும் கிடையாது.

ஸ்பாட் பிக்சிங் செய்யும் வீரர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும். ஏனெனில் இது பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் செயல். எனவே இதற்கான தண்டனையை கொலை குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தூக்கு தண்டனையாக கொடுக்க வேண்டும்.

asif

சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களை தூக்கில் போட்டு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டால் அதன் பின்னர் எந்த ஒரு வீரரும் சூதாட்டத்தில் ஈடுபட தயங்குவார்கள். அதனை பற்றி நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். சூதாட்ட செயலில் ஈடுபடும் வீரர்கள் சொந்த குடும்பத்திற்கும் தங்களது நண்பர்களுக்கு கூட உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அப்படி உண்மையாய் இருந்தால் இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் வாழ்க்கைக்கு தகுதியற்றவர்கள். பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பின்னர் அதில் மாட்டிக்கொள்வது பின்னர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் அணிக்குள் வருவது மிக இயல்பாக மாறிவிட்டது.

Pak-1

இது மனதிற்கு சற்று மோசமான விஷயமாக உள்ளது என்று கூறியுள்ளார் ஜாவித் மியான்தத். ஆனால் கிரிக்கெட் உலகில் அதிக சூதாட்டம் செய்தவர்கள் பாகிஸ்தான் அணியில் தான் இருக்கிறார்கள் என்பது இவருக்கு தெரியுமோ என்னவோ.

Advertisement