என்னை பொறுத்தவரை இந்திய அணியின் வீரரான இவரே தலைசிறந்த பேட்ஸ்மேன் – ஜாவித் மியான்தத் பேட்டி

Javed
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஜாவித் மியான்தத் பாகிஸ்தான் அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளிலும், 233 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். மேலும் ஓய்வுக்கு பிறகும் கிரிக்கெட் தொடர்பான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

Javed 1

- Advertisement -

மேலும் அதுமட்டுமின்றி ஜாவித் மியான்தத் தற்போது தனது யூடியூப் சேனல் மூலம் கிரிக்கெட் குறித்த பல விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தன்னுடைய யூடியூப் சேனலில் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர் யார் என்று என்னிடம் கேட்டால் விராட்கோலி என்றுதான் நான் கூறுவேன். அவரைப் பற்றி நான் அதிகம் கூற வேண்டியது இல்லை. அவர் செயல் திறன்களே அவரைப் பற்றி கூறும். அவரது புள்ளிவிவரங்களும் இதையே கூறுவதால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

Kohli-2

அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் சீரற்ற ஆடுகளங்களில் சதமடித்த கோலி வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பயப்படுகிறார் அல்லது பந்து ஏறிவரும் ஆடுகளங்களில் விளையாட முடியாது. சுழற்பந்து வீச்சுக்கு விளையாட முடியாது என எந்த வித குறைகளும் அவரிடம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

விராட் கோலியின் பேட்டிங்கில் வெளுத்துக் கட்ட கூடியவர் அவரது ஷாட்டை பார்க்கும்போது ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கும். அவர் இன்றைய காலகட்ட பேட்ஸ்மேன்களில் ஒரு தரமான வீரர் என்று மியான்தத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சர்வதேச மட்டத்தில் தற்போது கோலியின் பார்ம் சரிந்துள்ளதால் அவரைப் பற்றிய விமர்சனங்கள் தற்போது வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Kohli-1

விராட் கோலி இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7240 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 248 ஒருநாள் போட்டியில் விளையாடி 11867 ரன்களை குவித்துள்ளார். 82 டி20 போட்டிகளில் விளையாடி 2794 ரன்கள் குவித்துள்ளார்.

Advertisement