அஸ்வினை முந்திய ஜஸ்ப்ரித் பும்ரா.. ஐசிசி தொடரில் வேறு எந்த இந்திய பவுலரும் 2 வரலாற்று சாதனை

Jasprit Bumrah 5
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. அதனால் குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா சூப்பர் 8 சுற்று வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம்.

முதலில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதை விட பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று நிறைய ரசிகர்கள் நினைத்தனர்.

- Advertisement -

பும்ராவின் சாதனை:
இருப்பினும் பந்து வீச்சில் ஆரம்பம் முதலே சரியான லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி துல்லியமாக பந்து வீசிய பும்ரா பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அதிரடியாக விளையாட விடாமல் மடக்கிப் பிடித்தார். குறிப்பாக 31 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலை கொடுத்த முகமது ரிஸ்வானை கிளீன் போல்ட்டாக்கிய அவர் மொத்தம் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அந்த வகையில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் மீண்டும் ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருதுகளை வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் டி20 உலகக் கோப்பையில் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இது போக இதையும் சேர்த்து 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற அனைத்து விதமான ஐசிசி தொடர்களையும் சேர்த்து மொத்தமாக அவர் 5* ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா ஜெயிச்சது 6 ரன்ஸ் வித்யாசம்.. அதுல என்னோட பங்கை நினச்சா வேற லெவல்.. சிராஜ் பேட்டி

இதன் வாயிலாக ஐசிசி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய பந்துவீச்சாளர் என்ற ஆல் டைம் சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஐசிசி தொடர்களில் தலா 4 முறை ஆட்டநாயகன் விருது வென்றதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் பும்ரா இந்தியாவின் புதிய ஆல் டைம் பவுலராக மகத்தான உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement