
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணம் முடிந்த கையோடு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
அப்படி அயர்லாந்து நாட்டிற்கு செல்லும் இந்திய அணி அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அதன் பின்னர் இங்கிலாந்து பயணம் செய்து அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்தது.
அப்படி வெளியான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இரண்டு தொடர்களிலுமே இடம்பெறவில்லை. முதன்மை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் பும்ரா இப்படி இரண்டு தொடர்களில் இருந்தும் நீக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கான காரணத்தை தற்போது தேர்வுக்குழு நிர்வாகம் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது ஏனெனில் : ஜஸ்ப்ரீத் பும்ரா ஏற்கனவே கடந்த ஓராண்டாக மிக அதிகமான போட்டிகளில் விளையாடி உள்ளார். அது மட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து விளையாடியுள்ளதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அக்சர் படேலிடம் இருந்து கைமாறிய துணை கேப்டன் பதவி.. புதிய டி20 கேப்டன் யார் தெரியுமா? – விவரம் இதோ
அதோடு மட்டுமின்றி அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை நடைபெறுவதால் அதில் முழுவதுமாக பங்கேற்கும் வகையில் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என நிர்வாகம் சார்பில் தெளிவாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.