அக்சர் படேலிடம் இருந்து கைமாறிய துணை கேப்டன் பதவி.. புதிய டி20 கேப்டன் யார் தெரியுமா? – விவரம் இதோ

Axar Patel
- Advertisement -

ஜூன் 6-ஆம் தேதியான இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி துவங்கியதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ எதிர்வரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. அதில் டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக புதிய டி20 கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை அறிவித்தது.

இந்திய டி20 அணியின் புதிய டி20 கேப்டன் :

அவரது தலைமையின் கீழ் 16 பேர் கொண்ட இந்திய டி20 அணியை பி.சி.சி.ஐ வெளியிட்டிருந்தது. அதில் துவக்க வீரருக்கான இடத்தில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு டி20 அணியில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் ஏற்கனவே இருந்த நட்சத்திர வீரர்களுடன் இந்த அணி அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் துணை கேப்டன் பதவியில் இருந்த அக்சர் படேலின் பெயர் சாதாரண வீரராகவே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் துணை கேப்டன் பதவியில் இருந்து அக்கர் பட்டேல் நீக்கப்பட்டது ஏன்? அவருக்கு பதிலாக புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பது குறித்த விவரமும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :

இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு புதிய கேப்டனாகஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் நீண்ட ஒரு கரியர் இருக்கும் வீரராக பார்க்கப்படும் திலக் வர்மாவிற்கு புதிய துணை கேப்டன்சி வழங்கப்பட்டுள்ளது. அக்சர் படேல் இனி ஜடேஜாவின் இடத்தை பூர்த்தி செய்வார் என்பதனால் அவர் துணை கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டுகால சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

அதேவேளையில் முதன்மை பேட்ஸ்மேனாக விளையாடும் திலக் வர்மாவிற்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய இருவருக்கும் இந்த இரண்டு தொடர்களிலுமே வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement