- Advertisement -
ஐ.பி.எல்

இது நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்ல..தனது கேப்டன்சி குறித்து போட்டிக்கு பின்னர் பேசிய – ஜஸ்ப்ரீத் பும்ரா

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியில் விளையாடிய ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது. அதேவேளையில் இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பெற்ற பஞ்சாப் அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

தனது கேப்டன்சி குறித்து பேசிய ஜஸ்ப்ரீத் பும்ரா :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை குவிக்க பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் பும்ரா கூறியதாவது : கேப்டனாக முதல் போட்டியிலே வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியின் முதல் பாதியில் பஞ்சாப் அணி அதிதியாக விளையாடிய பின்னர் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது சிறப்பாக இருந்தது.

இந்த போட்டியில் பேட்டிங்குக்கு சாதகமாக மைதானம் இருந்ததால் ஸ்டம்பை நோக்கி மட்டுமே வீச வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையிலே எங்களது பந்துவீச்சாளர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். போட்டியின் பிற்பாதியில் திலக் வர்மா மிகச்சிறப்பான இன்னிங்சை விளையாடி எங்களது அணியின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார். அவருக்கு இணையான ஒரு செயல்பாட்டை பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : எதையும் சுட்டிக்காட்ட விரும்பல.. தோற்றதை எங்களால் ஜீரணிக்க முடியல – ஷ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

அதேபோன்று வில் ஜாக்ஸ் மிகச் சிறப்பான செயல்பாட்டை இறுதியில் வழங்கியிருந்தார். மும்பை அணியின் கேப்டனாவதற்கு முன்னதாகவே ஏற்கனவே நான் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளேன். ஒருநாள் போட்டியில் மட்டும்தான் நான் இதுவரை கேப்டன்சி செய்யவில்லை அது நடக்குமா? என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -