ஏற்கனவே நிறைய பாத்துட்டேன். காயத்தினால் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு – பும்ரா அளித்த பேட்டி

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர். ஏற்கனவே சமீபத்திய தொடர்களில் இந்திய அணியின் பவுலிங் வீக்னஸ் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ள வேளையில் உலக கோப்பையிலும் பும்ரா விளையாட முடியாத பட்சத்தில் இந்திய அணி எவ்வாறு அந்த தொடரில் செயல்பட போகிறது என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட காயம் புதிதல்ல என்றும் 2019 ஆம் ஆண்டும் இதேபோன்று ஒரு காயத்தை சந்தித்து இருப்பதாக பும்ரா பேசியுள்ளார்.

Bumrah

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : நான் சிறுவயதில் இருந்தே அமைதியாக இருக்க மாட்டேன் எனக்கு மிகவும் அதிகமாக கோபம் வரும். எப்பொழுதுமே அனைவரிடம் ஆக்ரோஷமாகவே நடந்து கொள்வேன். அதன் பிறகு தான் என்னால் உணர முடிந்தது என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று. இப்படி கோபப்பட்டால் நான் களத்தில் சிறப்பாக செயல்பட முடியாது என்று புரிந்து கொண்டு கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதன் பிறகு தான் கோபத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என படிப்படியாக கற்றுக் கொண்டேன். நிதானமாக இருப்பது பலமுறை எனக்கு உதவி செய்துள்ளது. நான் பெற்ற அனுபவங்களில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளேன். நிறைய தவறுகளை செய்யும் போது தான் அதில் உள்ள குறைகளை உணர்ந்து திருந்த முடியும். அப்படி பல விடயங்களை நான் மாற்றி உள்ளேன். மேலும் கோபம் வந்தால் என் மனது அமைதியாகும் படி இருக்கும் விடயத்திற்கு திரும்பி விடுவேன்.

Bumrah 1

கிரிக்கெட் விளையாடும் போது நான் செய்யும் தவறுகள் எங்கு நிகழ்கின்றன என்பதை பொறுமையாக யோசிப்பேன். அப்படியும் நான் தவறு செய்யும் இடங்கள் எனக்கு தெரியவில்லை என்றால் என் மீது அக்கறை வைத்திருக்கும், நம்பிக்கை வைத்திருக்கும் சில நபர்களின் உதவியை நாடுவேன். அதோடு பயிற்சியாளர்களிடமும் நிறைய அறிவுரையை கேட்பேன். சிறுவயதிலேயே நான் என் தந்தையை இழந்து விட்டேன். என் தாய் தான் வேலைக்கு சென்று எங்களை பார்த்துக் கொண்டார்கள். நான் வாழ்க்கையில் எவ்வளவோ உயரத்தையும் பார்த்திருக்கிறேன் வீழ்ச்சியையும் பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

ஒரே நாளில் எதுவும் மாறிவிடாது என்று பும்ரா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் இப்பொழுதெல்லாம் திமிராக நடந்து கொள்வதில்லை. என் தாய் எனக்காக நிறைய செய்திருக்கிறார்கள். அவர்களுக்காக நான் எவ்வளவு செய்தாலும் அதற்கு ஈடாகாது. அதேபோன்று என்னுடைய தாய் என்னை இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதே கிடையாது. நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வமாக இருந்ததால் என்னை என் இஷ்டம் போல் இருக்க அனுமதித்தார்கள்.

இதையும் படிங்க : அவசரப்படாதீங்க இன்னும் முழுசா விலகல, நல்லதே நடக்கும் – பும்ரா பற்றி ரசிகர்களுக்கு கங்குலி தெம்பான செய்தி

ஆனாலும் என் தாய் பள்ளி முதல்வர் என்பதனால் ஆங்கிலம் மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக இருந்தார்கள் என்றும் கூறியுள்ளார். தற்போது காயத்திற்கு பிறகு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்டு வரும் பும்ரா ஏற்கனவே தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற காயத்தை சந்தித்ததாகவும் நிச்சயம் அதிலிருந்து திரும்ப வர முடியும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement