இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் தற்போதைய நிலையில் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது :
10 வருஷம் விளையாடியதில் மகிழ்ச்சி : ஜஸ்ப்ரீத் பும்ரா
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவிக்க அடுத்ததாக 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன் காரணமாக அவருக்கு போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது செயல்பாடு குறித்து பேசியிருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியதாவது : உண்மையிலேயே இந்த வெற்றியில் என்னுடைய பங்களிப்பு இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அணியின் நிர்வாகம் என்னை எங்கு பந்துவீச அழைக்கிறதோ அங்கு நான் பந்து வீச தயார்.
புதுப்பந்தில் பந்துவீச என்னை அழைத்தால் மேலும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் ஆசிய கோப்பை தொடரிலிருந்து எனக்கு ஒரு புது ரோல் இந்திய அணியில் இருந்து வருகிறது. அதனால் தான் நான் துவக்க ஓவர்களை வீசாமல் பிற்பாதியில் பந்து வீசி வருகிறேன். நிச்சயம் அணி எவ்வாறு என்னை பயன்படுத்த நினைகிறதோ அதற்கு ஏற்றார் போல் நான் பந்து வீச தயாராக இருக்கிறேன்.
இதையும் படிங்க : இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்? 3 ஆவது போட்டியில் அடைந்த தோல்வி குறித்து – மிட்சல் சான்ட்னர் பேட்டி
இந்திய அணிக்காக ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்ற கனவு சிறு வயதில் இருந்தது. ஆனால் தற்போது 10 ஆண்டுகளாக நான் இந்திய அணிக்காக எனது நாட்டிற்காக விளையாடி வருவதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு வேகப்பந்து வீச்சாளராக இத்தனை காயம், போராட்டம் அனைத்திற்கும் பிறகு இவ்வளவு தூரம் விளையாடி வந்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சி என ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



