இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்? 3 ஆவது போட்டியில் அடைந்த தோல்வி குறித்து – மிட்சல் சான்ட்னர் பேட்டி

Mitchell Santner
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியானது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்திய அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய : மிட்சல் சான்ட்னர்

இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது கௌஹாத்தி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்த டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 153 ரன்களை மட்டுமே குவிக்க 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறியதாவது :

உண்மையிலேயே இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்ள வேண்டியது அவசியம். பவர்பிளே ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் 150 ரன்கள் வரை மட்டுமே குவிக்க முடிந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தமாதிரி ஆட்டத்தை தான் நாங்க விளையாடுவோம்.. நியூசிலாந்தை நொறுக்கிய பிறகு – சூரியகுமார் யாதவ் பேட்டி

எப்பொழுதுமே டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டை விட்டால் அதன்பிறகு அதிலிருந்து மீண்டு வருவது கடினம். அழுத்தத்திற்கு மத்தியில் நாங்கள் மாட்டிக் கொண்டதால் எங்களால் பெரியளவு ரன்களை குவிக்க முடியவில்லை. ஒருவேளை 180 முதல் 190 ரன்களை வரை அடித்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைத்ததாகவும் மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement