உண்மையிலேயே எனக்கு இது ஏமாற்றமாக இருந்தது.. ஆனா என்ன பண்றது – வருத்தத்தை தெரிவித்த ஜஸ்ப்ரீத் பும்ரா

Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த தொடரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

காயம் அடைந்தது ஏமாற்றத்தை அளித்தது :

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய கேப்டனான பும்ராவின் செயல்பாடு பலரது மத்தியில் பாராட்டினை பெற்று இருந்தது. ஏனெனில் இந்த தொடரில் மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க தடுமாறிய வேளையில் ஒவ்வொரு 13 பந்துகளுக்கும் விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக பந்துவீசி 31 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெடுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை பும்ரா நிகழ்த்தி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த தொடரின் தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது.

இருந்தாலும் சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் காயத்தால் தான் பந்துவீச முடியாமல் போனது தனக்கு வருத்தம் அளித்ததாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் காயம் ஏற்பட்டு என்னால் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது.

- Advertisement -

இருந்தாலும் நமது உடம்பிற்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். உடற்தகுதியை எதிர்த்து நம்மால் போட்டி போட முடியாது. இந்த போட்டியில் காயமடைந்தது எனக்கு தனிப்பட்ட வகையில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக சிட்னி போன்ற மைதானத்தில் பந்துவீச முடியாதது வருத்தம் அளித்தது. இருந்தாலும் நான் நமது அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்சில் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : இவங்க கூட விளையாடனது எனக்கு ரொம்ப ஹேப்பி.. பெருமையா இருக்கு – தொடர் வெற்றிக்கு பின் கம்மின்ஸ்

அந்த வகையில் நமது அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக பந்து வீசியதாக உணர்ந்தேன். முதல் இன்னிங்சின் போது எனக்கு அசவுகரியம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே என்னால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச முடியாமல் போனது வருத்தம் என பும்ரா வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement