இவங்க கூட விளையாடனது எனக்கு ரொம்ப ஹேப்பி.. பெருமையா இருக்கு – தொடர் வெற்றிக்கு பின் கம்மின்ஸ்

Cummins
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது.

வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி :

அதன்படி இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 185 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 181 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடி இந்திய அணி 157 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டி முடித்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து நாங்கள் சரியான திட்டத்துடன் இருந்தோம். அந்த வகையில் இந்த தொடரின் முடிவில் வெற்றி பெற்றது பெருமையாக இருக்கிறது.

- Advertisement -

முதல் போட்டி எங்களது அணிக்கு சாதகமாக செல்லவில்லை என்றாலும் ஒரு அணியாக நாங்கள் மீண்டு வந்து இந்த கோப்பையை ஜெயித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி. எங்களது அணியில் மூன்று அறிமுகவீரர்கள் இந்த தொடரில் அறிமுகமாக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர். இப்படி ஒரு அடியுடன் இணைந்து விளையாடி அது உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது.

இதையும் படிங்க : எனக்கு இதுதான் ரொம்ப முக்கியம்.. என்னை விளையாட வையுங்க ப்ளீஸ் – கெஞ்சிய ஜஸ்ப்ரீத் பும்ரா

இதுபோன்ற பெரிய அணிக்கு எதிராக பெற்ற வெற்றி எங்களுக்கு இன்னும் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்திய அணியும் இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்ததால் ரசிகர்களுக்கும் இந்த தொடர் விருந்தாக அமைந்தது என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement