எனக்கு இதுதான் ரொம்ப முக்கியம்.. என்னை விளையாட வையுங்க ப்ளீஸ் – கெஞ்சிய ஜஸ்ப்ரீத் பும்ரா

Jasprit
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிட்னி நகரில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவரது காயம் பெரிய அளவில் ஏற்படவில்லை என்று உறுதியானது.

இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம் :

இதன் காரணமாக அவர் மீண்டும் வந்து இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. ஆனால் ஸ்கேன் பரிசோதனை முடிவில் மருத்துவக்குழு அவரை தீவிரமாக கண்காணிப்போம் என்றும் இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்வார் என்றும் பந்துவீசும் வாய்ப்பு என்பது கடினமான ஒரு முடிவு தான் என்றும் கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

மேலும் ஏற்கனவே முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பும்ரா பந்துவீசினால் நிச்சயம் அவரது காயம் அதிகரிக்கலாம் என்பதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அவர் பந்து வீசமாட்டார் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் தனக்கு காயம் ஏற்பட்டாலும் பரவாயில்லை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதால் இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச விரும்புவதாக பும்ரா மருத்துவக்குழுவினரிடம் பேசியுள்ள ஒரு விவகாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் பும்ராவிற்கு தசை பிடிப்பு இருப்பதன் காரணமாக மருத்துவக்குழு அவரை பந்துவீச வேண்டாம் என்றும் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருவதால் உங்களுடைய பங்களிப்பு முக்கியம் என்று கூறி அவரை பந்துவீச வேண்டாம் என்று சொல்லி உள்ளது. ஆனால் அதனை மறுத்த பும்ராவோ அடுத்து வரும் தொடரை பற்றி தற்போது யோசிக்க தேவையில்லை. தற்போதைக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதுதான் முக்கியம்.

- Advertisement -

எனவே நான் நான்கு ஓவர்கள் ஸ்பெல்லாக வீச விரும்புகிறேன். எனக்காக வலி நிவாரண ஊசிகள், வலி நிவாரணி மாத்திரைகளை கொடுங்கள். நான் இந்த போட்டியில் விளையாடிட்டு அதன் பின்னர் மற்றவற்றை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதனை மறுத்துள்ள மருத்துவ கண்காணிப்பு குழு நீங்கள் பேட்டிங் செய்ய வேண்டுமென்றால் உங்களுடைய விருப்பம் ஆனால் பந்துவீச வேண்டாம் என்று உறுதியாக மறுத்துள்ளது.

இதையும் படிங்க : 10 வருடம்.. தசாப்தம் கழித்து சரிந்த சகாப்தம்.. மோசமான சாதனை படைத்த இந்தியாவை.. நாக் அவுட் செய்த ஆஸி தகுதி

இப்படி இந்திய அணிக்காக காயம் இருந்தாலும் பரவாயில்லை நான் பந்துவீசுவேன் என்று உம்ரா அவர்களுடன் பும்ரா போராடி இருக்கிறார். பும்ரா தனது காயத்தை பொருட்படுத்தாமல் இந்திய அணியின் வெற்றிக்காக மருத்துவ கண்காணிப்பு குழுவிடம் பேசியுள்ள விவரம் வெளியாகி அனைவரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement