- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னோட காலேஜ் லைப்ல நான் பாஸ்ட் பவுலர்லாம் கிடையாது.. ஜஸ்ப்ரீத் பும்ரா கூறிய சம்பவம் – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்றார். அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா இதுவரை மும்பை அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். குறிப்பாக இதுவரை 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 183 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கல்லூரி காலத்தில் நான் பாஸ்ட் பவுலர் கிடையாது : ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2016-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளையும், 83 டி20 போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதுமட்டும் இன்றி 2018-ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 52 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 234 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி வரும் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான அவர் தற்போது காயம் காரணமாக முக்கியமான தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். அதோடு அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்திய அணி முக்கியமான தொடர்களுக்கு மட்டுமே அவரை பயன்படுத்தி வருகிறது.

இருந்தாலும் ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என எந்த ஒரு ஐசிசி தொடராக இருந்தாலும் அவரே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். அந்த அளவிற்கு அவருடைய சிறப்பான பந்துவீச்சில் மூலம் இந்திய அணிக்கு கைகொடுத்து வருகிறார். உலகின் எந்த மூலைக்கு சென்று விளையாடினாலும் தனது மிகச் சிறப்பான கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் எதிரணியை அச்சுறுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தன்னுடைய கல்லூரி காலத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து சில கருத்துக்களை பும்ரா பகிர்ந்துள்ளார். அப்படி அவர் பகிர்ந்து விடயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வெளியான ஒரு வீடியோவில் ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியதாவது : நான் என்னுடைய கல்லூரி காலத்தில் எல்லாம் வேகப்பந்து வீச்சாளராக இல்லை. ஆப் ஸ்பின் மட்டுமே வீசுவேன். அப்போதும் என்னால் விக்கெட்டுகளையும் எடுக்க முடிந்தது.

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிடை கடந்து அசத்தலான சாதனையை நிகழ்த்திய – ஸ்டீவ் ஸ்மித்

அதேபோன்று விக்கெட் கீப்பராக செயல்பட்டு ஸ்டம்பிங் கூட செய்து இருக்கிறேன். மேலும் ஆறாம் இடத்தில் களமிறங்கி பேட்டிங் கூட விளையாடி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி நவீன கால தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் எவ்வாறு இருந்தேன்? என்பது குறித்தும் அதன் பின்னரே வேகப்பந்து வீச்சாளராக மாறியதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -