IND vs ENG : பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆல்-டைம் சாதனையை தகர்த்து புதிய சாதனையை – படைத்த பும்ரா

Jasprit Bumrah ENG vs IND
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டி இறுதி நாளை எட்டியுள்ளது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் அபாரமாக செயல்பட்டு இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு புஜாரா, கில், விராட் கோலி, விகாரி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

அதனால் 98/5 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். அதில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 (111) ரன்களும் பொறுமையாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

சொதப்பிய இந்தியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தை தரமான பந்துவீச்சில் பெரிய ரன்களை எடுக்க விடாமல் மடக்கிப் பிடித்த இந்திய பவுலர்கள் 284 ரன்களுக்கு சுருட்டினர். ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உட்பட முக்கிய வீரர்கள் ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்கள் எடுத்தார். அதனால் 132 என்ற பெரிய ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்து 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Pujara

ஆனால் முதல் இன்னிங்சை விட மோசமாக பேட்டிங் செய்த இந்தியா வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது. கில், விராட் கோலி, விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முக்கிய வீரர்கள் 2-வது வாய்ப்பிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி சொதப்பலுக்கு காரணமாக அமைந்தனர். அதை சரி செய்வதற்காக போராடிய புஜாரா அதிகபட்சமாக 66 ரன்களும் அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 378 என்ற இலக்கைத் துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 100/0 என்ற வலுவான தொடக்கத்தை பெற்று அச்சுறுத்தல் கொடுத்தது.

- Advertisement -

போராடும் பும்ரா:
அப்போது அனலாக பந்துவீசிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஜாக் கிராவ்லி 47, ஓலி போப் 0 என முக்கிய வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்ய மறுபுறம் 46 ரன்கள் எடுத்து அச்சுறுத்திய அலெஸ் லீஸ் 56 ரன்களில் ரன் அவுட்டானார். ஆனாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் 76* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 72* ரன்களும் எடுத்ததால் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 259/3 ரன்களை எடுத்துள்ள இங்கிலாந்துக்கு கடைசி நாளில் வெற்றிக்கு 100 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

Jasprti Bumrah

ஆனால் 7 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதால் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றி கேள்விக் குறியாகியுள்ளது. தற்போதைய நிலைமையில் இப்போட்டியை இந்தியாவால் டிரா செய்யவும் முடியாது என்ற பரிதாபமும் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடைசி நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா விலகிய இப்போட்டியில் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாத நிலையில் இந்தியாவை வழிநடத்தும் ஜஸ்பிரித் பும்ரா முடிந்த அளவுக்கு வெற்றிக்காகப் போராடி வருகிறார்.

- Advertisement -

முதலில் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஒரு 35 ரன்களை பறக்கவிட்டு உலக சாதனை படைத்த அவர் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய போது முதல் 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் கையை ஓங்க வைத்தார். அதேபோல் 2-வது இன்னிங்சிலும் 107/0 என இங்கிலாந்து மிரட்டியபோது அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து முழு மூச்சுடன் போராடி வருகிறார்.

Bumrah-4

புதிய சாதனை:
ஆனால் இதர பவுலர்கள் அவருக்கு கை கொடுக்காததால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. இப்போட்டியில் இதுவரை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஜஸ்பிரித் பும்ரா சேனா நாடுகள் எனப்படும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 சவாலான வெளிநாட்டு மண்ணில் 100 விக்கெட்டுகளை அதிவேகமாக எடுத்த ஆசிய பந்துவீச்சாளர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமின் ஆல்-டைம் சாதனையை தகர்த்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரிட் பும்ரா : 28 வருடம் 211 நாட்கள்
2. வாசிம் அக்ரம் : 28 வருடம் 230 நாட்கள்

இதையும் படிங்க : IND vs ENG : நாகரிகம் இல்லாமல் அம்பயரை ஸ்லெட்ஜிங் செய்த இங்கி வீரர் – அம்பயரின் நெத்தியடி பதில் இதோ

இதுவரை அவர் மொத்தமாக எடுத்துள்ள 123 விக்கெட்டுகளில் இங்கிலாந்தில் 36, ஆஸ்திரேலியாவில் 32, தென்ஆப்பிரிக்காவில் 26, நியூசிலாந்தில் 6 என 100 விக்கெட்களை சவாலான ஆசிய கண்டத்திற்கு வெளியே எடுத்துள்ளார் என்பது அவரின் சொக்க தங்க தரத்தை காட்டுகிறது.

Advertisement