
அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் இந்தியா விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 13 ரன்களில் அவுட்டானார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த லபுஸ்ஷேன் 64, மெக்ஸ்வீனி 39 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் 9, அலெக்ஸ் கேரி 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் இந்தியாவை மீண்டும் அடித்து நொறுக்கி 17 பவுண்டரி 4 சிக்சருடன் 140 (141) ரன்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில் பட் கமின்ஸ் 12, மிட்சேல் ஸ்டார்க் 18 ரன்கள் எடுத்த உதவியுடன் ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முன்னதாக ஆஸ்திரேலியாவின் தரமான ஸ்டீவ் ஸ்மித்தை 2020 மெல்போர்ன் போட்டியில் 8, 2024 பெர்த் போட்டியில் 0, 2024 அடிலெய்ட் போட்டியில் 2 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா அவுட்டாக்கினார்.
இதன் வாயிலாக ஸ்டீவ் ஸ்மித்தை அவருடைய சொந்த ஊரான ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 3 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய முதல் பவுலர் என்ற தனித்துவமான சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். அவரை தவிர்த்து வேறு யாருமே ஸ்மித்தை ஆஸ்திரேலியாவில் 3 முறை ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் அனுப்பியதில்லை. மறுபுறம் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 157 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இதையும் படிங்க: 111 பந்தில் மிரட்டல்.. இந்தியாவை மீண்டும் நொறுக்கிய டிராவிஸ் ஹெட்.. உலக சாதனை சதம்.. சிராஜ் பதிலடி
வரலாற்றில் இலங்கை (2018இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக) மற்றும் ஆஸ்திரேலியா (2020இல் இந்தியாவுக்கு எதிராக) அணிகள் மட்டுமே பகல் இரவு போட்டிகளில் முதல் இன்னிங்சில் இப்படி பின்தங்கியும் வென்றுள்ளது. இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை இப்போட்டியில் மாற்றி இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.