நான் மந்திரவாதில்லாம் கிடையாதுங்க.. என்கிட்ட கத்துக்கிட்டு விளையாடும் அவர் நல்லா வருவாரு.. பும்ரா

Jasprti Bumrah
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை ஒய்ட்வாஷ் செய்து இந்தியா கோப்பையை வென்றது.

குறிப்பாக கான்பூரில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்களில் அதிரடியாக விளையாடிய இந்தியா மழையையும் தாண்டி அற்புதமான வெற்றி பெற்று உலக சாதனைகளையும் படைத்தது. இந்த வெற்றிக்கு 6 விக்கெட்டுகளை எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

அசத்திய பும்ரா:

குறிப்பாக 5வது நாள் உணவு இடைவெளிக்கு முன் 9 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசத்துக்கு முஸ்பிகர் ரஹீம் மட்டும் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து போராடினார். அவரை கடைசிப் பந்தில் அவுட்டாக்கிய பும்ரா இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார். அதனால் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை கொடுக்கும் மேஜிக் பவுலர் என்பதை மீண்டும் பும்ரா நிரூபித்தார். இந்நிலையில் தாம் மேஜிக் பவுலர் கிடையாது என்று பும்ரா பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகாஷ் தீப் தம்மிடம் எப்படி பந்து வீச வேண்டும் என்று அடிக்கடி அசத்துவதாகவும் பும்ரா பாராட்டியுள்ளார். எனவே வருங்காலங்களில் ஆகாஷ் தீப் அசத்துவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மந்திரவாதி என்றழைப்பது பற்றி நான் எதுவும் நினைக்கவில்லை. 2 நாட்கள் ஆட்டத்தை இழந்த பின்பும் பெற்ற இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷலானது. இங்கே தான் உங்களுடைய அனுபவத்தை பயன்படுத்த வேண்டும்”

- Advertisement -

ஆலோசனை கேட்கும் ஆகாஷ்:

“சொன்னதை விட அது கடினமானது. சென்னையை விட கான்பூர் மைதானம் வித்தியாசமாக இருந்தது. இந்தியாவில் நாங்கள் நிறைய விளையாடியுள்ளதால் மைதானத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது மற்ற பவுலர்களுக்கு உதவி செய்ய வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். ஆகாஷ் தீப் அடிக்கடி என்னிடம் வந்து நான் எதை செய்ய வேண்டும், நீங்கள் நினைக்கிறீர்கள் என அடிக்கடி கேட்பார்”

இதையும் படிங்க: தன்னுடைய கையொப்பமிட்ட பேட்டை வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு பரிசளித்த கோலி – எதற்கு தெரியுமா?

“நிறைய இதயத்துடன் பந்து வீசும் அவர் தன்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்கிறார். உலகக்கோப்பை முடிந்த பின் எங்களுக்கு ஓய்வு கிடைத்தது. அதனால் நாங்கள் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் சூழ்நிலைகளை நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியால எங்களுக்கு பெரிய டெஸ்ட் தொடர் உள்ளது. அதனால் எங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது” என்று கூறினார்.

Advertisement