- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சின்ன வயசுல அவங்கள பாத்து காப்பியடிப்பேன்.. யார்க்கர் போட இதான் காரணம்.. பவுலிங் ஆக்சன் பற்றி பும்ரா பேட்டி

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்றார். அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா என்றாலே அவருடைய வித்தியாசமான ஆக்சன் மற்றும் துல்லியமான யார்கர் பந்துகள் ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றதாகும். குறைந்த தூரம் ஓடி வந்து வித்தியாசமாக பந்து வீசும் அவர் கடந்த வருடங்களில் அதிக காயங்களை சந்தித்தார். அப்போது இந்த ஆக்சனை வைத்துக்கொண்டு இவரால் நீண்ட காலம் விளையாட முடியாது என்ற பேச்சுக்கள் காணப்பட்டன.

- Advertisement -

தனித்துவ ஆக்சன்:
இருப்பினும் அதே ஆக்சனை வைத்து தற்போது நம்பர் ஒன் பவுலராக முன்னேறியுள்ள பும்ரா தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் சிறுவயதில் தொலைக்காட்சியில் விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்களை எல்லாம் தாமும் காப்பி அடிக்க முயற்சித்ததாக ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார். மேலும் தமக்கென்று சொந்தமாக ஒரு பவுலிங் ஆக்சனை வைத்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனாலேயே நாளடைவில் இப்படி ஒரு ஆக்சன் தாமாக வந்ததாகவும் தெரிவிக்கும் பும்ரா யார்க்கர் பந்துகளையும் தொலைக்காட்சியில் பார்த்து கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். அதையும் நாளடைவில் முன்னேற்றியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “10வது முடிக்கும் வரை என்னுடைய அம்மா நான் கிரிக்கெட்டில் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் நான் படிப்பில் கவனம் செலுத்த மாட்டேன் என்று அவர் கருதினார்”

- Advertisement -

“அதனால் நான் வழக்கமான பயிற்சிகளை அதிகம் எடுக்க மாட்டேன். எனவே கிரிக்கெட்டை கற்றுக்கொள்ள தொலைக்காட்சி மட்டுமே எனக்கு ஒரே வழியாக இருந்தது. குழந்தையாக இருக்கும் போது யாரெல்லாம் விக்கெட்டுகள் எடுப்பார்களோ அவர்களை நான் காப்பியடிக்க முயற்சிப்பேன். ஏனெனில் என்னிடம் சொந்தமாக ஆக்சன் இல்லை. அதனால் குதித்து ஓடி வருவது போல் முயற்சித்தது சுவாரசியமாக உருவானது”

இதையும் படிங்க: இதை பண்ணா மட்டும் போதும்.. மீண்டும் ஹார்டிக் பாண்டியா கேப்டனாவதை யாராலும் தடுக்க முடியாது – ஹர்ஷா போக்லே

“அந்த ஆக்சனை தான் தற்போது கொண்டுள்ளேன். இடதுகை வேகப்பந்து வீச்சளார்களால் கவரப்பட்ட நான் இடது கையில் வீச முயற்சித்தேன். தொலைக்காட்சியில் நான் கிரிக்கெட்டை பார்த்த போது யார்க்கர் பந்துகள் சினிமா விஷயம் போல ஆர்வமாக இருக்கும். கிரிக்கெட்டில் அதுவே நான் உற்று நோக்கிய முதல் பந்தாகும். அதைத்தொடர்ந்து கிரிக்கெட்டில் விளையாடும் போது யார்கர் பந்துகளை முன்னேற்றிய எனக்கு அதில் திறமை இருப்பதை உணர்ந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -