இதை பண்ணா மட்டும் போதும்.. மீண்டும் ஹார்டிக் பாண்டியா கேப்டனாவதை யாராலும் தடுக்க முடியாது – ஹர்ஷா போக்லே

Bhogle
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் டி20 வகையிலான போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்ததால் டி20 இந்திய அணிக்கு புதிய கேப்டனை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. ரோகித்துக்கு பிறகு பாண்டியாவே துணை கேப்டனாக செயல்பட்டு வந்ததால் அவரே இந்திய அணியின் டி20 கேப்டனாக மாறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் புதிய பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சூரியகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக நியமித்ததோடு ஹார்டிக் பாண்டியாவை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதிவில் இருந்தும் நீக்கினார். அதனை தொடர்ந்து டி20 அணியின் புதிய துணை கேப்டனாக இளம்வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா நிச்சயம் பெரிய ஏமாற்றத்தை சந்தித்து இருப்பார் என்று கூறலாம். ஏனெனில் 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை என முக்கிய தொடர்களில் பாண்டியாவே துணை கேப்டனாக செயல்பட்ட வேளையில் அவரது பதவி பறிக்கப்பட்டது அவருக்கு நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

அதோடு தற்போது அவர் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு கேப்டன்சி மறுக்கப்பட்டு வருவது விமர்சகர்களையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. இந்நிலையில் வெகு விரைவில் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக மாறும் வாய்ப்பு இருப்பதாக பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியா தற்போது எல்லா விதமான வெள்ளை பந்து போட்டிகளிலும் விளையாடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கிறது. அதற்கு அவர் முழு உடற்தகுதியுடன் இனிவரும் அனைத்து தொடர்களிலும் தொடர்ச்சியாக விளையாடினால் நிச்சயம் அவருக்கு மீண்டும் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க : 7 விக்கெட்ஸ்.. அண்டர்-25 இங்கிலாந்து வீரர்களிடம் ஆரம்பம் ஆவதற்குள் இலங்கைக்கு விழுந்த பரிதாப அடி

தற்போதைக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக சோதனை கட்டத்தில் தான் இருக்கிறார். அவர் நிரந்தர கேப்டனாக செயல்படுவாரா என்றால் அது நிலையல்ல. எனவே நிச்சயம் பாண்டியா இனிவரும் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவருக்கு கேப்டன்சி வாய்ப்பு தேடி வரும் என்று ஹர்ஷா போக்லே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement