- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உடையும் இந்தியாவின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கனவு? விலகிய பும்ரா, வருண் சேர்ப்பு.. புதிய அணி இதோ

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்த அவர் தனி ஒருவனாக வெற்றிக்கு போராடினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சுமாராக விளையாடியதால் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை நழுவ விட்ட இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. அந்தக் காயத்திலிருந்து பும்ரா சாம்பியன்ஸ் டிராபி துவங்குவதற்குள் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

விலகிய பும்ரா:

ஆனால் நேற்று சோதிக்கப்பட்டதில் அவருடைய காயம் இன்னும் குணமடையவில்லை என்பது தெரிய வந்தது. அதனால் அவர் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள பிசிசிஐ ஹர்ஷித் ராணாவை மாற்று வீரராக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2013க்குப்பின் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும் கனவு பாதி உடைந்துள்ளது என்றே சொல்லலாம்.

ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு பும்ரா தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவர் இல்லாதது இந்திய பவுலிங் துறையை பலவீனமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள். இது போக ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

வருண் சேர்ப்பு:

கம்பேக் கொடுத்தது முதல் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் 18 விக்கெட்டுகள் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் தற்போதைய இங்கிலாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மறுபுறம் ரோஹித் – கில் இருப்பதால் பேக்-அப் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு தற்போது காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: என்னை கழற்றி விட்டது ஏமாற்றம்.. 402 ரன்ஸ் 33 விக்கெட்ஸ்.. இதை செஞ்சு இங்கிலாந்துக்கு வருவேன்.. தாகூர் பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ரானா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி. ரிசர்வ்: யசஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், சிவம் துபே

- Advertisement -