
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்டுகள் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனால் கடந்த 2014 முதல் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சந்தித்து வந்த தோல்விகளை உடைத்த இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்றது.
முன்னதாக பிரபல அம்பையர் ரிச்சர்ட் ஃகெட்டல்போரபை இந்திய ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது என்றே சொல்லலாம். ஏனெனில் 2014 முதல் 2023 வரை நடைபெற்ற ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. அந்த அனைத்துப் போட்டிகளிலும் அவர் நடுவராக இருந்தார். அந்த வகையில் ராசியற்ற அவர் வந்தாலே இந்தியா தோற்று விடும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பயத்தை வெளிப்படுத்துவார்கள்.
நேரில் கேட்பேன்:
அந்த நிலையில் 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவர் கொடுத்த ஒரு சுமாரான தீர்ப்பு இந்தியாவின் வெற்றியை பறித்தது என்றே சொல்லலாம். ஆம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் 241 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 137* (120) ரன்கள் விளாசி இந்தியாவை வீழ்த்தினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 58* ரன்கள் விளாசி 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சாய்த்தார். ஆனால் அவர் 34 ரன்களில் இருந்த போது 28வது ஓவரை வீசிய பும்ரா 5வது பந்தில் துல்லியமான யார்க்கர் வீசினார். அது லபுஸ்ஷேன் காலில் பட்டதால் உடனே பும்ரா அவுட் கேட்டார். இருப்பினும் அதை அம்பையர் ரிச்சர்ட் ஃகெட்டால்போரப் கொடுக்க மறுத்து விட்டார்.
உடனடியாக ரோகித் சர்மா ரிவ்யூ எடுத்த போது பந்து ஸ்டம்ப் மீது உரசிக்கொண்டு சென்றது தெரிந்தது. ஆனால் களத்தில் இருந்த அம்பயர் நாட் அவுட் கொடுத்ததால் 3வது அம்பயரும் அதே தீர்ப்பை வழங்கினார். அதனால் பும்ரா தன்னுடைய முகத்தை மூடி சோகத்தை வெளிப்படுத்தினார். ஒருவேளை அந்த இடத்தில் அவுட் கிடைத்திருந்தால் அதை பயன்படுத்தி குறுகிய இடைவெளியில் இன்னும் சில விக்கெட்டுகளை எடுத்து இந்தியா வென்றிருக்கலாம்.
இதையும் படிங்க: இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
இந்நிலையில் நேரில் பார்க்கும் போது ரிச்சர்ட் ஃகெட்டல்போரப்பிடம் ஏன் அவுட் கொடுக்கவில்லை? என்று கேட்பேன் என ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது பின்வருமாறு. “சரி அல்லது தவறு என்பது வேறு விஷயம். ஆனால் உலகக்கோப்பை ஃபைனலில் நான் அம்பயர்ஸ் கால் தீர்ப்பில் மார்னஸ் லபுஸ்ஷேன் விக்கெட்டை எடுத்தேன். எனவே எப்போது ரிச்சர்ட்டை நேரில் சந்தித்தாலும் நீங்கள் அதை அவுட் கொடுத்திருக்க வேண்டும் என்று சொல்வேன்” எனக் கூறினார்.