ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. அதன் வாயிலாக 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா கோட்டை விட்டது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.
இந்நிலையில் கடைசி போட்டியில் பிட்ச் பவுலிங் செய்வதற்கு சாதகமாக இருந்ததாக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தாம் காயத்தை சந்திக்காமல் பவுலிங் செய்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இத்தொடரில் தோல்வியை சந்தித்தாலும் ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் வருங்காலத்திற்கு இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
பெருமையுடன் பும்ரா:
மேலும் இந்தத் தொடரில் கிடைத்த அனுபவ பாடங்கள் அடுத்த தொடர்களில் வெல்வதற்காக கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 32 விக்கெட்டுகள் எடுத்து தொடர்நாயகன் விருதை வென்ற பும்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “காயத்தால் விளையாட முடியாதது கொஞ்சம் விரக்தியை கொடுக்கிறது. ஆனால் சில நேரங்களில் நீங்கள் உங்களுடைய உடலுடன் சண்டையிடாமல் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்”
“இந்த தொடரில் இருந்ததில்லையே பவுலிங் செய்வதற்கு அதிக சாதகமான பிட்ச்சில் கடைசியில் பந்து வீச முடியாதது ஏமாற்றம். முதல் இன்னிங்ஸில் கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்ததால் அந்த முடிவை எடுத்தேன். அப்போது மற்ற பவுலர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பேசினோம். எப்போதும் ஒரு குறைவாக இருந்தால் மற்றவர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்”
ஒருதலைபட்சமாக தோற்கல:
“இன்று காலை வெற்றிக்கு தேவையான போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் பேசினோம். இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் கடினமாக சண்டையிட்டோம். அதனால் இன்று உட்பட நாங்கள் ஒருதலைப் பட்சமாக தோற்றோம் என்று அர்த்தமல்ல. ஆனால் டெஸ்ட் போட்டிகள் அவ்வாறு தான் செல்லும். நீண்ட நேரம் களத்தில் நின்று அழுத்தத்தை உருவாக்கி உள்வாங்கி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுவது முக்கியம்”
இதையும் படிங்க: எனக்கு இதுதான் ரொம்ப முக்கியம்.. என்னை விளையாட வையுங்க ப்ளீஸ் – கெஞ்சிய ஜஸ்ப்ரீத் பும்ரா
“இது போன்ற அனுபவங்கள் எங்களுக்கு வருங்காலத்தில் உதவும். தங்களது பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடிய இளம் வீரர்கள் நல்ல அனுபவத்தை பெற்றனர். தொடரை வெல்ல முடியாததால் அவர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். ஆனால் இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் பாடங்களை எடுத்துக் கொள்வார்கள். இது சிறந்த தொடராக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள். அவர்களும் கடினமாக போராடினார்கள்” என்று கூறினார்.



