- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கு பும்ரா – 1 விக்கெட் போதும்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியானது இன்று நவம்பர் 8-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ள இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் இந்திய பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தவிருக்கும் சாதனை :

இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றும் என்பதால் இந்திய அணி இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐந்தாவது போட்டியில் பந்துவீச தயாராக இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு விக்கெட்டை மட்டும் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை டி20 போட்டிகளில் 79 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் வேளையில் இன்றைய போட்டியில் அவர் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றுவார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஏற்கனவே அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் இன்றைய டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான சர்வதேச போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் குல்தீப் யாதவின் ஆல்டைம் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – வருண் சக்கரவர்த்தி

இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 226 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளையும், 79 டி20 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -