இன்னும் 5 விக்கெட் போதும்.. 2ஆவது டெஸ்ட் போட்டியில் மாபெரும் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா

Jasprit Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்கிற இக்கட்டான சூழலுடன் நாளை இரண்டாவது போட்டியில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.

ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்த இருக்கும் அசத்தல் சாதனை :

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நவம்பர் 22-ஆம் தேதி கௌஹாத்தி மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா மொத்தமாக 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அவர் 16 முறை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதோடு 7 முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் 237 விக்கெட்டுகளை கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பத்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை பிடித்து டாப் 10-ல் இடம் பெறுவார்.

- Advertisement -

தற்போதைய நிலையில் பத்தாவது இடத்தில் இருக்கும் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளுடன் 10-ஆவது இடத்தில் இருக்கும் வேளையில் அவரது இந்த சாதனையை முறியடிக்க பும்ராவிற்கு 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரராக அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : 2019 உ.கோ மாதிரி இங்கிலாந்து அணி.. பஸ்பாலை க்ரீயேட் பண்ணதே ஆஸி ஆஷஸ்’க்காக தான்.. ரிக்கி பாண்டிங்

ரவிச்சந்திரன் அஷ்வின் 537 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கும் ஸ்ரீநாத்தை பின்னுக்கு தள்ளி பும்ரா பத்தாவது இடத்தை பிடிக்க 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் நிச்சயம் இந்த போட்டியில் அவர் அந்த சாதனையை நிகழ்த்துவார் என்று நம்பலாம்.

Advertisement