- Advertisement -
ஆசிய கோப்பை

ஓமன் அணிக்கெதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்க திட்டம் – அவருக்கு பதிலாக விளையாடப்போவது யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டு முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரின் போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி இருந்தார். அதன்பிறகு ஒரு மாத ஓய்வுக்கு பின்னர் தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.

ஓமன் அணிக்கெதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு :

இந்த தொடரிலும் முக்கியமான போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்றும் சில போட்டிகளில் அவர் ஓய்வெடுத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய அவர் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை எதிர்த்து செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக ஓமன் அணியை வீழ்த்தி விடும் என்பதனால் சற்று முக்கியத்துவம் குறைந்த இந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

அவர் இந்த போட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டால் அடுத்த சூப்பர் ஃபோர் சுற்றின் போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் வருவார் என்பதாலும் அவருக்கு ஓய்வுளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 28ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது.

- Advertisement -

நிச்சயம் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வெடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 14 ஃபோர்ஸ் 4 சிக்ஸ் 77 பந்தில் 100.. ஆஸியை நொறுக்கிய மந்தனா.. உலக சாதனையுடன் 2 அபார சாதனை

ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நிலையில் அடுத்ததாக தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபியில் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -