இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இணைந்திருந்தார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமெரிக்கா அணிக்கு எதிரான முதலாவது லீக் போட்டியின் போது அவர் விளையாடவில்லை.
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாடுவாரா? :
அந்த போட்டிக்கு பின்னர் குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் வானிலை மாற்றம் காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு காய்ச்சல் இருப்பதினால் இந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்று உறுதி செய்தார். அதனை தொடர்ந்து காய்ச்சலில் இருந்து மீண்ட அவர் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.
இந்திய அணி இந்த தொடரில் தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நமீபியா அணியை எதிர்த்து நாளை பிப்ரவரி 12-ஆம் தேதி டெல்லி நகரில் விளையாடயிருக்கிறது. இவ்வேளையில் அந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்வியும் பலரது மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் பும்ரா இன்று இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாகவே அவர் காய்ச்சலால் பயிற்சி செய்ய முடியாமல் இருந்த நிலையில் தற்போது அவர் நீண்ட நேரம் பந்துவீச்சு பயிற்சி எடுத்ததாக இந்திய அணியில் துணைப் பயிற்சியாளரும் உறுதி செய்தார். பயிற்சியின் போது எவ்வித சிக்கலும் இன்றி நிறைய ஓவர்களை அவர் வீசியதால் நிச்சயம் நமீபியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : அவங்கள அவ்ளோ சீக்கிரம் ஜெயிக்க விடமாட்டோம்.. இந்திய அணியை எச்சரித்த – பாகிஸ்தான் வீரர்
அப்படி பும்ரா பிளேயிங் லெவனுக்குள் வரும் பட்சத்தில் கடந்த போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை ஐசிசி தொடர்களில் முக்கிய பந்துவீச்சாளராக விளையாடி வரும் அவர் மீண்டும் முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்ப இருப்பது இந்திய அணிக்கும் மேலும் பலத்தை சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



