ஜஸ்பிரீத் பும்ரா ஐ.பி.எல் தொடரை முழுவதுமாக கூட தவறவிட வாய்ப்பு.. மும்பை அணிக்குள் விழுந்த இடி – வெளியான தகவல்

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் விளையாடியிருந்த அவர் கடைசி போட்டியின் போது கேப்டனாகவும் செயல்பட்டிருந்தார். மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறினார்.

பும்ரா ஐ.பி.எல் தொடரை முழுவதுமாக தவறவிட வாய்ப்பு :

அதனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா விளையாடியிருந்தார். ஆனால் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசுகையில் அசவுகரியத்தை சந்தித்த பும்ரா பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது முதுகுப் பகுதியில் அழுத்தத்தினால் முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடாத அவர் நாடு திரும்பிய பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர சிகிச்சை மற்றும் பயிற்சியில் இருந்தார். ஏற்கனவே முதுகுப் பகுதியில் பும்ராவிற்கு அறுவை செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அதே இடத்தில் அறுவை சிகிச்சை செய்யும் பட்சத்தில் அது அவரது கரியரையே முடிவுக்கு கொண்டு வரலாம் என்று பேசப்பட்டது.

அதன் காரணமாக பிசிசிஐ அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய விரும்பவில்லை மாறாக அவருக்கு தேவையான கால அவகாசம் கொடுத்து ஓய்வினை வழங்க விரும்பியது. அந்தவகையில் கடைசியாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாடியிருந்த அவர் ஐபிஎல் தொடரில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் முழுவதுமாக குணமடையாததால் ஆரம்ப கட்ட போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் பும்ரா ஐ.பி.எல் தொடருக்கு திரும்ப கூடுதல் காலதாமதம் ஏற்படும் என்றும் ஒருவேளை அதுவும் சரிபடவில்லை என்றால் ஐபிஎல் தொடரை முற்றிலுமாக தவறவிட வாய்ப்பு இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலில் : பிசிசிஐ தற்போதைக்கு பும்ராவை ஐபிஎல் தொடரில் விளையாட வைக்க விரும்பவில்லை. ஏனெனில் ஐ.பி.எல் தொடரை விட எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான் இந்திய அணிக்கு மிக முக்கியம்.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் சொன்ன இந்த வார்த்தை தான் நான் அசத்தலாக விளையாட காரணம் – நேஹல் வதேரா பேட்டி

எனவே பும்ராவை அவசரப்பட்டு ஐபிஎல் தொடரில் விளையாட வைத்தால் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனால் அவரை தற்போதைக்கு விளையாட வைக்க பிசிசிஐ விரும்பவில்லை. ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அதை செய்ய வேண்டாம் என்றும் அவருக்கு சரியான ஓய்வை வழங்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement