
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தற்போது நிலையில் சமநிலையில் உள்ளனர்.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இதன் காரணமாக மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியினை மேற்கொண்டு வரும் வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த பயிற்சியை தவிர்த்துள்ளார் என்ற தகவல் வெளியாகியது.
இதன் காரணமாக அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்படி ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த பயிற்சியினை தவிர்த்தற்கான காரணமாக ஒரு சில முக்கிய விடயங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் அவர் வெற்றிக்கு மிக முக்கியமான துருப்பு சீட்டாக இருந்து வருகிறார்.
இந்த தொடரானது 5 போட்டிகள் கொண்ட பெரிய தொடர் என்பதினால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டே பயிற்சியை தவிர்த்து இருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து கேப்டன் ரோகித் சர்மா பும்ராவின் பணிச்சுமையை இந்திய அணி தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சாய் சுதர்சன்.. என்ன ஆனது? – எப்போது சரியாகும்
இதனால் எதிர்வரும் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று பேசப்பட்ட வேளையில் முதன்மையாக விளையாடும் போட்டிகளில் அவர் ஓய்வெடுக்கக்கூடாது என்பதற்காகவே பயிற்சி போட்டிகளை அவர் தவிர்த்து நேராக எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் விளையாட தயாராகலாம் என்று தெரிகிறது.