நல்லவேளை ஐபிஎல் லக்கேஜ் வரல.. அந்த மாதிரி மேட்ச் ஓடுனாலே டிவியை ஆஃப் பண்ணிடுவேன்.. பும்ரா பேட்டி

Jasprit Bumrah 6
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகள் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய 3வது போட்டியில் அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. முன்னதாக இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது சிறப்பாக பந்து வீசிய அவர் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகள் எடுத்தார். அதே போல மற்ற பவுலர்களும் அசத்தியதால் பாகிஸ்தானை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

ஐபிஎல் லக்கேஜ்:
முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரில் பெரும்பாலான போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டன. சொல்லப்போனால் சில போட்டிகளில் அசால்டாக 250க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டன. ஆனால் இந்த டி20 உலகக் கோப்பையில் அப்படியே அதற்கு நேர்மாறாக இந்தியா போன்ற பல டாப் அணிகள் 150 ரன்களை தொடுவதற்கே திணறி வருகின்றன.

இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்திய 2024 ஐபிஎல் பிட்ச்கள் டி20 உலகக் கோப்பையிலும் இல்லாதது மகிழ்ச்சியை கொடுப்பதாக ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். மேலும் சிறு வயதிலிருந்தே பேட்டும் – பேட்டும் மோதும் போட்டிகளை பார்த்தால் தொலைக்காட்சியை அணைத்து விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் தாம் பந்து வீச்சின் ரசிகன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த லக்கேஜ் (ஐபிஎல் மைதாங்கள்) இங்கு வராததற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இங்கே பவுலர்களுக்கு கிடைக்கும் உதவியை நாங்கள் பயன்படுத்த முயற்சிக்கிறோம். என்னுடைய இளம் வயதில் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். அப்போதெல்லாம் பந்துக்கு பேட் சவாலை கொடுக்கும் போட்டியை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். ஆனால் பேட்டும் – பேட்டும் மோதினால் அதைப் பார்க்காமல் நான் தொலைக்காட்சியை அணைத்து விடுவேன்”

இதையும் படிங்க: 17.3 ஓவரில் 107 ரன்ஸ்.. ஒரு வழியாக கனடாவை திணறலாக வீழ்த்திய பாகிஸ்தான்.. ரோஹித்தின் சாதனை ரிஸ்வான் சமன்

“ஏனெனில் பேட்டுக்கும் பந்துக்கும் போட்டி நிலவும் போது தான் அது நன்றாக இருக்கும். நான் பவுலிங்கின் ரசிகன். அப்படி இருந்தால் நான் புகார் செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஐபிஎல் 2024 தொடரில் பேட்ஸ்மேன்கள் அதிகப்படியாக அடித்து நொறுக்கியதால் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். எனவே நியூயார்க் போன்ற மைதானங்கள் தான் டி20 கிரிக்கெட்டில் உண்மையான போட்டியை கொண்டு வருவதாக பும்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement