
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை யாரும் இதுவரை வீழ்த்தாத பெர்த் மைதானத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 150 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா அணி 104 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 46 ரன்கள் என்கிற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது ஆறு விக்கெட் இழப்பிற்கு 487 குவித்து டிக்ளேர் செய்யவே ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 238 ரன்களுக்கு சுருளவே இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :
297 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 161 ரன்கள் குவித்து பேட்டிங் செய்ய கடினமான இந்த மைதானத்திலும் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார். முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனான பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதற்கு காரணம் யாதெனில் : இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டு சரிவை சந்தித்தாலும் நம்பிக்கை இழக்காமல் பந்தை கையில் எடுத்த ஜஸ்ப்ரீத் பும்ரா துவக்கத்திலிருந்தே ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்து முதல் இன்னிங்ஸ்சில் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதையும் படிங்க : எங்களுக்கு வார்னிங் குடுத்துட்டாங்க.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு பேசிய – பேட் கம்மின்ஸ்
அதோடு இரண்டாவது இன்னிங்சிலும் அழுத்தத்தை கொடுத்த அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி இரண்டு இன்னிங்க்ஸையும் சேர்த்து எட்டு விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியா அணியை கட்டுக்குள் வைத்ததற்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.