இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது பெர்த் நகரில் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி துவங்கி இன்று நடைபெற்ற நான்காம் நாளான ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் என்கிற மிகப்பெரிய ரன் வித்தியாசத்துடன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு நிகழ்த்தியுள்ளது.
இந்த தோல்வி எங்களுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது :
இதுவரை பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியையே சந்திக்காத வேளையில் அந்த அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதோடு இந்த ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய தொடறில் தற்போது இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்று கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வெறும் 150 ரன்களை மட்டுமே குவித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதனை தொடர்ந்து 534 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற மிகப்பெரிய இலக்கினை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 238 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை இழந்தது.
அதன்காரணமாக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
இந்த தொடர் ஆரம்பிக்கும் போது நாங்கள் மிகச் சிறப்பாக தயாராக இருக்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் இதுபோன்ற தோல்வி நாங்கள் இன்னும் நிறைய விடயங்களை சரி செய்ய வேண்டும் என்று எங்களை எச்சரிக்கை படுத்தியுள்ளது. இருந்தாலும் நிச்சயம் அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாங்கள் சிறப்பாக தயாராவோம் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 295 ரன்ஸ்.. ஆஸியை பும்ரா தலைமையில் ஓடவிட்டு கரியை பூசிய இந்தியா.. ஆப்டஸில் உலக சாதனை வெற்றி
இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை விட இரண்டாவது நாள் ஆட்டத்தில் இருந்து பெருமளவு வித்தியாசம் இருந்தது. நாங்கள் இன்னும் வலைப்பயிற்சியில் கூடுதல் கவனத்தை செய்ய வேண்டும் என்று நினைப்பதாக பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



