டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்திய மண்ணில் இந்த சாதனையை நிகழ்த்தி – பும்ரா அபாரம்

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி மார்ச் 12-ஆம் தேதி பெங்களூரில் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 252 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்து அசத்தினார்.

Bumrah 1

- Advertisement -

அதன்பின்னர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று தங்களது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியானது 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் பின்தங்கியது. இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்கள்.

இந்நிலையில் இந்த போட்டியின் முதலாவது இன்னிங்சில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Bumrah 2

அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக குறைந்து ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரிசையில் இவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்த இடத்தில் இஷாந்த் சர்மா 54 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்ததே மிகச் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இஷாந்த் ஷர்மாவை பின்னுக்குத்தள்ளி பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவரை தொடர்ந்து வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் 72 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் தற்போது 29 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 120 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : வயதானாலும் ஸ்டைல் குறையாத நட்சத்திரம்! உலகசாதனை படைத்து அசத்தல் – என்ன தெரியுமா?

அதேபோன்று 8 முறை அவர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் இந்திய மண்ணில் அவர் கைப்பற்றும் முதல் 5 விக்கெட் இன்னிங்ஸ் இதுதான் என்பது கூடுதல் சிறப்பம்சம். வெளிநாட்டு தொடர்களில் மட்டுமே பெரும்பாலான போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா தற்போது தான் இந்திய மண்ணில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement