- Advertisement -
ஐ.பி.எல்

புவனேஷ்வர் குமாருக்கு அடுத்து 2 ஆவது இந்திய பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியின் போது காயமடைந்ததால் கடந்த பல மாதங்களாகவே எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளராக பும்ரா நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட்ட அவர் கடந்த சில போட்டிகளாக அந்த அணியில் தொடர்ந்து இடம்பிடித்து விளையாடி வருகிறார். மும்பை அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க அந்த அணியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் தற்போது நட்சத்திர வீரர்கள் அனைவரும் பார்முக்கு திரும்பியதால் மீண்டும் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பெற்று வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 39 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளையும் சேர்த்து புவனேஸ்வர் குமாருக்கு அடுத்து இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளராக மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இதுவரை 302 போட்டிகளில் விளையாடி 318 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக நேற்று ஒரு விக்கெட் கைப்பற்றிய பும்ரா டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : தோனிக்காக ரசிகர்கள் செய்ற மாதிரி உலகில் பாத்ததில்லை.. அவரிடம் இதை கத்துக்கிட்டேன்.. ஓவர்டன் பேட்டி

அதிலும் 237 இன்னிங்ஸ்களிலேயே இந்த சாதனையை நிகழ்த்தி அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஆறாவது இந்திய வீரராகவும் அவர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -