- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 ஆண்டுகளை பூர்த்தி செய்த ஜஸ்ப்ரீத் பும்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று வகையான இந்திய அணியிலும் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வரும் அவர் நிச்சயம் 207 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைந்து விளையாடுவார். அதேவேளையில் அதற்கு முன்னதாக இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட போகிறார்.

10 ஆண்டுகளை பூர்த்தி செய்த ஜஸ்ப்ரீத் பும்ரா :

அவர் தேவையான அளவு முக்கிய தொடர்களில் விளையாடி வருகிறார். தற்போது 32 வயதாகும் அவர் காயம் மற்றும் பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திய அணி முக்கியமான தொடர்களில் மட்டுமே அவரை பயன்படுத்தி வருகிறது. அவரும் எந்த தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

அந்த அளவிற்கு இன்றளவும் அவரது பந்துவீச்சில் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாட இருக்கும் முன்னர் அவர் தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவு யாதெனில் :

அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி 10 ஆண்டுகள் பூர்த்தி செய்ததை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார். ஆம் கடந்த 2016-ஆம் ஆண்டு இதே ஜனவரி 23-ஆம் தேதி இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிய அவர் இன்று பத்தாவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 52 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 234 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு மாற்றத்துடன் இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதோடு 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளையும், 84 டி20 போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 3 வகையான போட்டிகளிலும் இந்திய அணிக்காக 100+ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி உலகளவில் எத்தனையோ பந்துவீச்சாளர்கள் இருந்தும் இன்றளவும் மிகச் சிறந்த பந்துவீச்சாளராகவும் அவர் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -