சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? – அவரது காயத்தின் நிலை என்ன?

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகுப்பகுதியில் காயமடைந்தார். சிட்னியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அசவுகரியத்தை சந்தித்திருந்த பும்ரா போட்டியின் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா? :

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் பும்ராவிற்கு முதுகு பகுதியில் தசைப்பிடிப்பில் ஏற்பட்டது உறுதியானது. இதன் காரணமாக அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவால் பந்துவீச முடியாமல் போனது. அதன்காரணமாக இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியையும் சந்தித்திருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து நாடு திரும்பிய அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் பும்ராவின் காயம் குறித்த முழு தகவலும் வெளியிடப்படவில்லை.

அடுத்த மாதம் 19 ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெறவுள்ள வேளையில் இம்மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பும்ரா விளையாடினால் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் பும்ராவின் காயம் குணமடைய குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்பதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதே வேலையில் நிச்சயம் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் மாயங்க் யாதவ் பங்கேற்பது சந்தேகம் – காரணம் இதோ

ஆனால் கடைசி நேரத்தில் அவரது உடல் நிலையை பொறுத்தே அவர் அந்த தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. அவரது உடல்நிலை காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement