- Advertisement -
இந்திய கிரிக்கெட்

110 வருடங்கள்.. அதிவேக 200.. ஷமி, அனில் கும்ப்ளேவை முந்தைய ஜஸ்பிரித் பும்ரா.. 3 வரலாற்று சாதனை

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை வெல்ல இந்திய அணி போராடி வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக களம் இறங்கிய இந்தியா மிகவும் போராடி 369 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 114, வாஷிங்டன் சுந்தர் 50, ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக லயன், கமின்ஸ், போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியா 4வது நாள் முடிவில் 228-9 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

அசத்தும் பும்ரா:

அதிகபட்சமாக லபுஸ்ஷேன் 70, கேப்டன் கமின்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் லயன் 41*, போலண்ட் 10* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் கடைசி நாளில் இந்தியா போராடி வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இப்போட்டியில் இதுவரை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 8* விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் சேர்த்து அவர் தனது கேரியரில் 44 போட்டிகளில் 202* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதை அவர் 8484 பந்துகளில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற முகமது ஷமி சாதனையை உடைத்துள்ள பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஷமி 9896 பந்துகளில் 200 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

அபாரமான பும்ரா:

மேலும் மெல்போர்ன் மைதானத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா மொத்தமாக மூன்று போட்டிகளில் 23* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக கடந்த 110 வருடங்களில் மெல்போர்ன் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வெளிநாட்டு பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இது போக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் அவர் 142 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:

இதன் வாயிலாக சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை உடைத்த ஜஸ்ப்ரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா: 142*
2. அனில் கும்ப்ளே: 141
3. இஷாந்த் சர்மா: 130
4. முகமது ஷமி : 123
5. ஜாஹீர் கான்: 119

- Advertisement -