ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் அந்த தொடரின் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26ம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 185 ரன்களை போராடி எடுத்தது.
அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இந்தியா 181 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
கலக்கும் பும்ரா:
அதைத்தொடர்ந்து நான்கு ரன்கள் முன்னிலையுடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. முன்னதாக இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஆரம்பம் முதலே அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் கேப்டனாக இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதே வேகத்தில் தொடர்ந்து அசத்தி வரும் அவர் இந்தப் போட்டியில் இதுவரை இரண்டு விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதையும் சேர்த்து இந்த தொடரில் அவர் மொத்தமாக இதுவரை 32* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் பிஷன் சிங் பேடி அவர்களின் சாதனையை உடைத்துள்ள பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜாம்பவானை முந்திய பும்ரா:
இதற்கு முன் 1977-78 ஆஸ்திரேலியா தொடரில் பிசின் சிங் அவர்கள் 31 விக்கெட்டுகள் எடுத்தது முந்தைய சாதனை. தற்போது அவருடைய 47 வருட சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா தூளாக்கியுள்ளார். கபில் தேவ், கும்ப்ளே போன்ற இந்திய கிரிக்கெட்டின் மற்ற ஜாம்பவான்கள் கூட அந்த சாதனையை கடந்த தொடர்களில் முறியடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இது நடந்தா கம்பீர் வெளியேற வேண்டியது தான் – பி.சி.சி.ஐ சார்பில் தகவல்
அந்தளவுக்கு தன்னுடைய திறமையால் அசத்தும் பும்ரா இப்போதே ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து ஐந்தாவது போட்டியில் அவருடைய தலைமையில் இந்தியா மீண்டும் அசத்தி வருகிறது. அந்த வாய்ப்பில் போட்டியை வென்று பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.



