அஸ்வினை முந்தி பும்ரா மீண்டும் சாதனை.. 22 வயதிலேயே விராட் கோலி, ரோஹித்தை முந்திய ஜெய்ஸ்வால் 

Team India
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நிறைவு பெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. குறிப்பாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை வெளுத்து வாங்கிய இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது.

அந்த வெற்றியால் பாகிஸ்தானை போல எங்களை வீழ்த்த முடியாது என்பதை வங்கதேசத்துக்கு காண்பித்த இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் நிரூபித்தது. இந்நிலையில் இந்தியா – வங்கதேசம், இலங்கை – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்கள் நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா சாதனை:

அதில் டாப் 10 பவுலர்களுக்கான பட்டியலில் வங்கதேச தொடரில் மொத்தம் 11 விக்கெட்டுகளை எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா 870 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வினை முந்தி உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அஸ்வின் – பும்ரா ஆகிய இருவருமே வங்கதேச தொடரில் தலா 11 விக்கெட்டுகள் எடுத்தனர். இருப்பினும் அஸ்வினை விட 12.82 என்ற குறைந்த சராசரியில் எடுத்ததால் பும்ரா தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.

சொல்லப்போனால் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்கனவே அஸ்வினை முந்தி அவர் முதலிடம் பிடித்திருந்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி நம்பர் ஒன் தரவரிசை இடத்தை பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்திருந்தார். இதற்கு முன் கடந்த 1979 – 1980 வருடங்களில் கபில் தேவ் அதிகபட்சமாக 2வது இடத்தை மட்டுமே பிடித்தார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அசத்தல்:

தற்போது அந்த வரலாறு காணாத சாதனையை மீண்டும் பும்ரா படைத்துள்ளார். மறுபுறம் அஸ்வின் 869 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் ஜடேஜா 6வது இடத்தில் நீடிக்கிறார். அதே போல பேட்டிங்கில் வங்கதேச தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் 22 வயதிலேயே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை முந்தி 3வது இடத்தை பிடித்து உலகின் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலக இதுதான் காரணம் – பாபர் அசாம் வெளிப்படை

விராட் கோலி 6 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் 9, ரோஹித் 15, சுப்மன் கில் 16வது இடங்களுக்கு சரிந்துள்ளனர். டாப் 10 டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா 1, அஸ்வின் 2, அக்சர் படேல் 7வது இடங்களைப் பிடித்து தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கின்றனர். அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் ஜொலிக்கும் நிலையில் இந்தியா 2வது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement