ரோஹித்துக்கு பின் அவர்தான் சரியான டெஸ்ட் கேப்டன். அதுதான் சரியாக இருக்கும்- இந்திய வீரர் கருத்து

Jasprith Bumrah India
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் தோனிக்குப் பின் 2014இல் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்ட இந்தியா குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வரலாற்று வெற்றிகளை குவித்து சரித்திரம் படைத்தது. இருப்பினும் உலக கோப்பை வாங்கித் தரவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து அவர் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டதால் அந்த அழுத்தத்திலிருந்து விடுபட முதலில் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

அதை பயன்படுத்திய பிசிசிஐ வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு இரு கேப்டன்கள் தேவையில்லை என்று கருதி அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பறித்து நீக்கி பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த அவர் 40 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்திருந்த போதிலும் கடந்த ஜனவரியில் பதவி விலகினார்.

- Advertisement -

அதனால் கடந்த பிப்ரவரியில் இருந்து முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். இருப்பினும் 34 வயதை கடந்துள்ள அவர் பொறுப்பேற்ற முதல் தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரிலேயே காயத்தால் விலகினார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு சொந்த மண்ணி எதிராக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் தென்ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வெடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க காத்திருந்தார்.

அடுத்த கேப்டன்:
ஆனால் கடைசி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் வெளியேறிய அவருக்கு பதில் கேஎல் ராகுலும் இல்லாத காரணத்தால் வேறுவழியின்றி கடைசி நேரத்தில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். அவரது தலைமையில் முதல் 3 நாட்கள் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்டு 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.

- Advertisement -

அப்போட்டியில் ரோகித் சர்மா இல்லாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அவரது தலைமையில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்தது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்கும் அவர் அடுத்ததாக டி20 தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார். இப்படி 35 வயதை நெருங்கியுள்ள அவர் இடையிடையே காயமடைவதும் ஓய்வெடுப்பதும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. எனவே நல்ல கேப்டன்ஷிப் திறமை வாய்ந்த இளம் வீரரை அடுத்த கேப்டனாக கண்டறியும் நிலைமைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

பண்ட் – ராகுல் – பும்ரா:
அதற்காக பண்ட், ராகுல், பும்ரா என 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் தகுதி பெற்றுள்ள 3 இளம் வீரர்களை ஏற்கனவே குறி வைத்துள்ள தேர்வுக்குழு அதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர் வருங்கால கேப்டனாவர்கள் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இதில் ரிஷப் பண்ட் சமீபத்திய தென்ஆப்பிரிக்க டி20 தொடரில் மொத்தமாக சொதப்பியதால் கேப்டன்சிப் பொறுப்புக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று அனைவரும் கருதுகின்றனர். எனவே கேஎல் ராகுல் அடுத்த கேப்டனாக வாய்ப்புள்ளதாக தெரிந்தாலும் திறமையான பும்ராவையும் விட முடியாது. இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவரால் தொடர்ந்து கேப்டனாக செயல்பட முடியுமா என்பதே யோசிக்க வைக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறந்த கேப்டனாக செயல்படும் திறமை பெற்றுள்ளார் என்று இந்திய வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ராகுல் மற்றும் பண்ட் ஆகியோரை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ள அவர் இதுபற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்னை பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ராவை எளிதாக தேர்வு செய்வேன். அவரிடம் கிரிக்கெட் பற்றிய நல்ல நுணுக்கங்கள் உள்ளது. அதை சிறப்பாக பந்து வீசும் அவரின் பந்துவீச்சில் நீங்கள் பார்க்க முடியும். எனவே தேவையான ஆதரவும் நேரத்தையும் கொடுத்தால் அவர் உச்சத்துக்கு வருவார். ஏனெனில் தனது அனுபவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் முன்னேற்றமடைந்து கொண்டே வருகிறார்”

- Advertisement -

“ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பொறுத்தவரை கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரையாவது தேர்வு செய்யலாம். அந்த 2 வகையான போட்டிக்கும் 2 கேப்டன்கள் இருந்தால் பணிச்சுமை குறையும். அதில் ஷ்ரேயஸ் ஐயரையும் பயன்படுத்தலாம். உங்களிடம் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார்.

இதையும் படிங்க : வீடியோ : ரிஷப் பண்ட் போட்ட இன்ஸ்டா லைவ். கட் பண்ணி வெளியேறிய தோனி – ஏன் தெரியுமா?

ஆனால் நீண்டகால தீர்வை பார்க்கும்போது 3 – 4 வருடங்கள் ஒருவர் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். அதில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் 8 – 10 வருடங்கள் வாய்ப்புளிக்கலாம். அந்தக் கோணத்தில் பார்க்கும்போது ராகுல் மற்றும் பண்ட் ஆகியோர் தகுதியானவர்களாக உள்ளனர்” என்று கூறினார்.

Advertisement