ரோஹித் மற்றும் வார்னர் யார் பெஸ்ட் ? இவருடன் விளையாடவே ஆசை – இங்கிலாந்து வீரர் விருப்பம்

- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜேசன் ராய் தற்போது தனது கருத்தினை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அல்லது டேவிட் வார்னர் யார் உங்களுடைய பேட்டிங் பார்ட்னர் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் வார்னர் ஆகிய இருவருமே மிகச்சிறந்த அதிரடி துவக்க வீரர்களாக அவர்கள் சார்ந்த அணிக்கு செயல்பட்டு வருகின்றனர்.

warner

மேலும் இருவருமே தங்களது அணிக்காக பலமுறை சிறப்பான இன்னிங்ஸ்களில் விளையாடி வெற்றி பெற்று கொடுத்தவர்கள். ஒருநாள் மற்றும் டி20, டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளிலும் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மூன்று இரட்டை சதங்களை அடித்து உலகசாதனை தன் வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

மேலும் கடந்த உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசி அசத்தினார். ஒருபுறம் ரோகித் இவ்வாறு அதிரடியாக காண்பிக்க மறுபுறமும் வார்னரும் தடையில் இருந்து மீண்ட பின்னர் பின்னி எடுத்து வருகிறார். முதலிலிருந்தே அடித்து ஆட கூடிய வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளிலும் வழங்கி வருகிறார்.

Rohith-3

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரில் யார் தனது பேட்டிங் பார்ட்னர் யார் என்று பேட்டியளித்த ராய் நிச்சயம் நான் ரோகித் சர்மா உடனே களமிறங்க ஆசைப்படுகிறேன். ஏனெனில் ரோகித் உடன் ஆடும் போது சற்று நிதானமாக நேரம் எடுத்துக் கொண்டாலும் ரோகித் செட்டில் ஆனவுடன் சிறப்பாக ஆடும் திறமை உடையவர் என்பதால் அவருடன் விளையாட ஆசைப்படுவதாக ஜேசன் ராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement