அவசர அவசரமா கெளம்பி போயி விளையாடறது எல்லாம் முடியாது. உலகக்கோப்பையை தள்ளி வைங்க – இங்கி வீரர் அட்டாக்

Roy
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற பல விளையாட்டுப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை பார்த்தால் இந்த வருடம் முழுவதும் ,உலகம் முழுக்க இதே நிலைதான் நீடிக்கும் என்று தெரிகிறது. மேலும் கிரிக்கெட் போட்டிகள் குறித்து எந்தவொரு நாடு நிர்வாகமும் வாய் கூட இதுவரை திறக்கவில்லை. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவே இன்னும் பல மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

roy 1

இதனால் உலகம் முழுவதும் ஊரடங்கு நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வர முடியாது. மேலும் அரசாங்க நிகழ்ச்சியோ, போது நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி என மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியை நடத்த முடியாது. கிரிக்கெட்டிற்கும் அதே நிலைதான். இதன்காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த உலகக் கோப்பை தொடரை தள்ளி வைக்கலாம் என்று இங்கிலாந்தின் துவக்க வீரர் ஜேசன் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Cup

கரோனா வைரஸ் இப்போதைக்கு முழுமையாக நம்மை விட்டுப்போகாது என்று நினைக்கிறேன். வைரஸ் தொற்றை தவிர்த்து விட்டு அவசர அவசரமாக ஆஸ்திரேலியாவில் சென்று விளையாட முடியாது. வீரர்கள் சரியான வகையில் தயாராகாமல் ஆஸ்திரேலியா சென்றால் அவர்களால் உலக கோப்பை தொடரை சரியாக விளையாடமுடியாது இதனால் இந்த தொடரை தள்ளி வைக்கலாம்.

அதுமட்டுமின்றி வீரர்கள் டி20 தொடருக்கு தயாராக வேண்டும் என்றால் குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும். மேலும் அதுமட்டுமின்றி தற்போதைய சூழலில் இருந்து மீண்டு நாம் தயாராவதற்கு இந்த அனைத்து கால அளவும் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் தொடரை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜேசன் ராய்.

Advertisement