IND vs WI : நான் அப்படி ஒன்னும் பெருசா பண்ணல. எங்களது வெற்றிக்கு காரணமே இதுதான் – ஆட்டநாயகன் ஹோல்டர் பேட்டி

Holder
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது தங்களது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பணத்தில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த டி20 தொடரின் முதலாவது போட்டியானது டிரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது. பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே அடித்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதோடு அவர் இந்த போட்டியின் 16-வது ஓவரை மெய்டனாக வீசியது மட்டுமின்றி அந்த ஓவரில் ஹார்டிக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது விக்கெட்டுகள் விழ முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அந்த இடத்தில் தான் போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஜேசன் ஹோல்டர் கூறுகையில் : நான் கடந்த மூன்று ஆண்டுகளாக நிறையவே கிரிக்கெட் விளையாடி விட்டேன். எனவே அதிலிருந்து சற்று ஓய்வெடுக்க நினைத்தே ஒருநாள் தொடரில் ஓய்வில் இருந்தேன்.

- Advertisement -

மீண்டும் தற்போது டி20 அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் என்னுடைய திட்டங்களை மிகவும் எளிதாக வைத்துக் கொள்ள நினைத்தேன். அதன்படி பதினாராவது ஓவரின் போது எளிதாக எந்த ஒரு ரன்னையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்தே பந்து வீசினேன். அந்த வகையில் அந்த ஓவர் எங்களது அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படிங்க : IND vs WI : இது நாங்க தோக்க வேண்டிய போட்டிதான். ஆனா இறுதியில் நாங்க ஜெயிக்க இதுவே காரணம் – ராவ்மன் பவல் மகிழ்ச்சி

அதேபோன்று செட் பேட்டர்கள் இருந்தால் இந்திய அணி போட்டியில் நீடித்திருக்கும். ஆனால் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டனர். அதோடு எங்களது அணியின் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பினை சரியாக வழங்கியதால் ஒரு ஒட்டுமொத்த அணியாகவே இந்த போட்டியை நாங்கள் வென்றோம் என ஜேசன் ஹோல்டர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement