உலகெங்கிலும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் முதன்முதலாக ஜூலை மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறைகளால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. பயோ செக்யூர் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு விளையாடப்பட்டது. அதன் பின்னர் மெல்ல மெல்ல ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச தொடர்கள் என அடுத்தடுத்த தொடர்கள் தற்போது ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் ஆறு மாத காலமாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கின்றனர். முதலில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் அதன்பின்னர் ஐபிஎல் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என கிட்டத்தட்ட ஆறு மாதமாக அவர்கள் நாடு திரும்பாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 தொடரையும் டெஸ்ட் தொடரையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தோல்விக்கு பிறகு மனம் வருத்தமான ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த 2020 ஆம் வருடம் மிகவும் கடினமான ஒரு ஆண்டாக எங்களுக்கு அமைந்துள்ளது. வீட்டுக்கு சென்று ஆறு மாதம் ஆகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : மிகவும் கடினமாக வருஷமாக இந்த வருடம் அமைந்துள்ளது இது அணிக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் கடினமானது என்று நினைக்கிறேன். ஆறு மாதங்களாக நான் வீட்டிற்கு செல்லவில்லை. நான் ஸ்டாப்பாக சென்று கொண்டிருக்கிறேன்.
இந்த நிலைமையில் எங்களுக்கு சம்பளப் பிடித்தம் வேறு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்பார்த்து பெற வேண்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.