20 ஆண்டு சாதனையை செய்த ஹோல்டர். பும்ரா எத்தனையாவது இடம் தெரியுமா ? – ஐ.சி.சி வெளியிட்ட தரவரிசை பட்டியல்

Holder
- Advertisement -

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டெஸ்ட் தொடர் கடந்த வாரம் துவங்கியது.

wi

- Advertisement -

இந்நிலையில் மூன்று மாத கால இடைவெளிக்குப் பிறகு நடந்த இந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தற்போது தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் வெற்றி பெற்று புள்ளிக்கணக்கினை துவங்கியுள்ளது.

அடுத்த சில தினங்களில் இரண்டாவது டெஸ்ட் துவங்க உள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் முதல் இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Holder 1

அதேபோல ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு இளம் நட்சத்திர வீரரான லாபுஷன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் நீடிக்கிறார். அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசி வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் போல்டர் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

அவரது தரவரிசை புள்ளிகளின் எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளது. இது அவரது சிறந்த புள்ளி மட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஒருவர் பெற்ற அதிகபட்ச புள்ளிகள் என்ற சாதனையும் அவருக்கு பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

Bumrah

இந்த டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்ரியல் 46 புள்ளிகள் அதிகம் பெற்று 18 ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஏழாவது இடத்தில் உள்ளார் என்பதும் கணிக்கவேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement