IND vs WI : ஒரே ஓவரில் வீழ்ந்த இந்திய அணி. இந்த ஒரு ஓவர் தான் இந்திய அணியின் – தோல்விக்கு காரணம்

Holder
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டிரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியும், ராவ்மன் பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக ராவ்மன் பவல் 48 ரன்களும், நிக்கோலஸ் பூரான் 41 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்ததால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 112 ரன்களுக்கு விக்கெட் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவாக இருந்தது.

அவ்வேளையில் இந்திய அணிக்கு கடைசி 30 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 16-வது ஓவரை வீசிய ஹோல்டர் முழுவதுமாக இந்திய அணியை தோல்விக்கு தள்ளிவிட்டார் என்று கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் அந்த 16-வது ஓவரின் முதல் பந்தில் ஹார்டிக் பாண்டியாவை கிளீன் போல்ட் செய்த ஹோல்டர் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சஞ்சு சாம்சன் ரன் அவுட்டாக காரணமாகவும் இருந்தார், இதன் காரணமாக அந்த 16-ஆவது ஓவர் மெய்டனாக மீதம் உள்ள நான்கு ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டது. இதன் காரணமாக இந்தியா அழுத்தத்திற்கு உள்ளாகி அதிலிருந்து மீள முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க : இந்தியாவை 2022இல் அடித்து நொறுக்கிய இங்கிலாந்தின் சர்ச்சை நாயகன் – 34 வயதிலேயே திடீரெனெ ஓய்வு – காரணம் இதோ

ஒருவேளை ஹார்டிக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி ஒரு ஓவர் முன்கூட்டியே போட்டியை முடித்திருக்கும் என்று சொல்லலாம். ஜேசன் ஹோல்டர் வீசிய அந்த பதினாறாவது ஓவர் வெஸ்ட் இண்டிஸ் அணியின் வெற்றிக்கும், இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement