நான்சென்ஸ்.. இதை செஞ்சா போதும் இந்தியாவை அசால்ட்டா பாக் தோற்கடிக்கும்.. கவாஸ்கருக்கு கில்லஸ்பி பதிலடி

Jason Gillespie
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களது போட்டிகளை பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு செல்லாமல் துபாயில் விளையாடி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் லீக் சுற்றுடன் வெறும் 5 நாட்களில் பரிதாபமாக வெளியேறியது.

குறிப்பாக பரம எதிரி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கொஞ்சமும் போராடாமல் தோல்வியை சந்தித்தது. இது போக சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் தோற்றது. அதன் காரணமாக தற்போதைய பாகிஸ்தான் அணியை இந்தியா பி அணியே எளிதாக தோற்கடிக்கும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் கருத்து:

இந்நிலையில் கவாஸ்கர் தெரிவித்த அந்த கருத்துக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்ப்பி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து சரியாகப் பயிற்சிகளை கொடுத்தால் இந்தியா மட்டுமின்றி உலகின் எந்த அணியையும் பாகிஸ்தான் அசால்டாக தோற்கடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த சொல்லாடல்களை நான் ஏற்கவில்லை. இந்தியா பி அல்லது சி அணி பாகிஸ்தான் டாப் அணியை வீழ்த்தும் என்று சுனில் காவாஸ்கரின் சில கருத்துக்களை பார்த்தேன். அது முட்டாள்தனம். முழுமையாக முட்டாள்தனம். பாகிஸ்தான் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து, அவர்களும் பிரகாசிக்க நேரம் கொடுத்தால், அவர்களின் விளையாட்டுகளை கற்று வளர்த்துக்கொள்ள நேரம் கொடுத்தால், அவர்கள் யாரையும் தோற்கடிக்க முடியும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை”

- Advertisement -

அசால்ட்டா ஜெய்க்கும்:

“இவை அனைத்தும் உயர்தரமான வீரர்களை சரியாக தேர்ந்தெடுப்பதை பொறுத்து அமையும். மேலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களுடன் பொறுமையாக இருப்பதும் அவசியம். பாகிஸ்தான் வாரியம் தங்களது கிரிக்கெட்டை முன்னேற்ற விரும்பினால் அதற்கு சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆதரவை வழங்கி பொறுமையுடன் காத்திருப்பது அவசியம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: பணத்துக்காக பாகிஸ்தான்.. ஐசிசி கோப்பைக்காக இந்தியா.. 2021 தெ.ஆ அணியை வைத்து ஹபீஸ் நிதர்சன பேட்டி

முன்னதாக கில்லஸ்பி பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அவரது வழிகாட்டுதலில் 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் சுமாராக விளையாடி அமெரிக்காவிடம் பரிதாபமாக தோற்றது. அதனால் கில்லஸ்பியை பாகிஸ்தான் வாரியம் அதிரடியாக நீக்கியது. அப்படி இருந்தும் அவர் இப்படி பேசுவது குறிப்பிடத்தானது.

Advertisement